நாட்டின் டாப் 10 பணக்கார எம்.பி.க்கள் லிஸ்ட் இதோ! முதல் 3 இடங்களில் இருப்பது தெலுங்கு தேசம், பாஜக!
டெல்லி: லோக்சபா எம்பிகளில் டாப் 10 பணக்காரர்கள் யார் என்பதற்கான தரவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி தெலுங்கு தேசம் கட்சியின் எம்பி முதல் இடத்தை பிடித்துள்ளார்.
மூன்றாவது முறையாகப் பதவியேற்றுள்ள மோடியின் ஆட்சியில் பாஜக எம்பிகள் 240 பேர் உள்ளனர். அதே போல் காங்கிரஸ் கட்சியின் எம்பிகள் 99 பேர் உள்ளனர்.

இந்த இரண்டு கட்சிகள்தான் அதிக எம்பிகளைக் கொண்டுள்ளன. அதற்கு அடுத்து மூன்றாவது பெரிய கட்சியாக உபி மாநிலத்தைச் சேர்ந்த அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி இடம்பிடித்துள்ளது.
இவை எல்லாம் ஹைலைட் செய்தி இல்லை. இந்த நாடாளுமன்ற அவையில் மொத்தம் 543 எம்பிகள் உள்ளனர். அதில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு தேசிய கட்சி எம்பிகளைவிட, மாநிலக் கட்சியைச் சார்ந்த எம்பிகள் பெரிய பணக்காரர்களாக உள்ளனர்.
அவர்கள் தாக்கல் செய்துள்ள தேர்தல் பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் உள்ள டாப் 10 பணக்கார எம்பிகள் யார் என்ற பட்டியல் கிடைத்துள்ளது.
அதன்படி தெலுங்கு தேசம் கட்சியில் உள்ள பெம்மாசானி தான் முதல் பணக்கார எம்பி என்ற இடத்தைப் பிடித்துள்ளார்.
டாப் 10 பணக்கார எம்பிகள் பட்டியல்:
1. டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி (தெலுங்கு தேசம்): தெலுங்கு தேசம் கட்சியின் எம்பிதான் இந்த டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி. மோடியின் 3.0 அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்புத்துறைஇணை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
நடந்து முடிந்துள்ள 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பணக்கார எம்பி இவர்தான்.
இவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் ₹5705+ கோடி. 18ஆவது மக்களவை எம்பிகளில் அதிக பணக்காரர் யார் என்ற பட்டியலில் முதலிடம் இவருக்குத்தான் கிடைத்துள்ளது.
குண்டூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள பெம்மாசானி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கிலாரி வெங்கட ரோசாலாவை 3,44,695 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
2. கொண்டா விஸ்வேஷ்வர் ரெட்டி (பாஜக): தெலுங்கானாவில் உள்ள செல்லேவா தொகுதியில் பாஜகவின் வேட்பாளராகக் களம் கண்டு வெற்றிபெற்றுள்ளார் கோண்டா விஸ்வேஷ்வர் ரெட்டி. இவர் 1,72,897 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கதம் ரஞ்சித் ரெட்டியை தோற்கடித்துள்ளார்.
ரெட்டியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.4568 கோடி என்று அவரே தேர்தல் பிரமாண பத்திரத்தில் அறிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களில் இரண்டாவது பணக்காரர் இவர்தான்.
3. நவீன் ஜிண்டால் (பாஜக): ஏற்கெனவே 2 முறை எம்.பி.யாக பதவி வகித்தவர் இந்த நவீன் ஜிண்டால். இந்த 2024 தேர்தலில் குருக்ஷேத்ரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் சுஷில் குப்தாவை 29,021 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார்.
நவீன் ஜிண்டால் ஆசியக் கண்டத்தில் மிகவும் வசதியான குடும்பங்களில் ஒன்றான ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் என்ற நிறுவனத்தின் தலைவர். இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.1241 கோடிக்கு மேல். ஆகவே மக்களவையில் மூன்றாவது பணக்கார எம்.பி. பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
4. பிரபாகர் ரெட்டி வெமிரெட்டி (தெலுங்கு தேசம்): விபிஆர் மைனிங் இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட் நிறுவனர்தான் இந்த பிரபாகர் ரெட்டி வெமிரெட்டி. அவரது நிறுவனத்தின் மொத்தம் மதிப்பு ₹716 கோடி. ஆகவே, இவரும் பணக்கார எம்பிகளின் பட்டியலில் 4ஆவது இடத்தை பிடித்துக் கொண்டுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நெல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் இவர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான வேணும்பாகா விஜய ரெட்டியை 2,45,902 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வெற்றி பெற்றுள்ளார்.
5. சி.எம். ரமேஷ் (பாஜக): சிந்தகுண்டா முனுசாமி என்பதன் சுருக்கம் தான் சி.எம். ரமேஷ். ராஜ்யசபா உறுப்பினராக இருந்து அனுபவம் பெற்ற அரசியல்வாதி. இவரது சொத்து மதிப்பு ரூ. 497 கோடி. இவருக்குப் பணக்கார எம்பிகள் படியலில் 5ஆவது இடம் கிடைத்துள்ளது.
இந்தப் பொதுத் தேர்தலில் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அனகாபள்ளி தொகுதியிலிருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பெற்ற மொத்தம் வாக்குகள் 6,44,444. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளரைவிட இவர் 2,96,530 வாக்குகளை அதிகம் பெற்றுள்ளார்.
6. ஜோதிராதித்யா எம். சிந்தியா (பாஜக): ஜோதிராதித்யா எம்.சிந்தியா 424 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை வைத்திருக்கிறார். முன்பு மோடி அமைச்சரவையில் சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எஃகு அமைச்சராகப் பணியாற்றியவர் சிந்தியா. இந்த முறை மத்தியப் பிரதேசத்தில் உள்ள குணா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
7. சத்ரபதி ஷாகு மகாராஜ் (காங்கிரஸ்): கோலாப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த சத்ரபதி ஷாஹு மகாராஜ். இவரது மொத்த சொத்து மதிப்பு ₹342 கோடி. மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். 1,54,964 வாக்குகள் வித்தியாசத்தில் சிவசேனா வேட்பாளர் சஞ்சய் சத்சிவ்ராவ் மாண்ட்லிக்கை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்..
8. ஸ்ரீபரத் மதுகுமில்லி (தெலுங்கு தேசம்): காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மென்ட்டின் தலைவர்தான் இந்த ஸ்ரீபாரத் மதுகுமில்லி. இவரது மொத்த சொத்து மதிப்பு ₹298 கோடிக்கு மேல். இவர் விசாகப்பட்டினம் தொகுதியிலிருந்து எம்பியாக வெற்றி பெற்றுள்ளார், தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரை 504,247 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
9. ஹேமா மாலினி (பாஜக): மதுரா தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார் ஹேமா மாலினி. காங்கிரஸ் வேட்பாளர் முகேஷ் தங்கரை 293407 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மாபெரும் சாதனையைப் படைத்துள்ளார் இவர். அவரது சொத்து மதிப்பு ₹278 கோடி. பாஜகவிலுள்ள பணக்கார எம்பிக்களில் இவரும் ஒருவர்.
10. டாக்டர் பிரபா மல்லிகார்ஜுன் (காங்கிரஸ்): டாக்டர் பிரபா மல்லிகார்ஜுன் காங்கிரஸ் கட்சியின் எம்பி. இவரது சொத்து மதிப்பு ₹241 கோடி. இவர் கர்நாடகாவின் தாவணகெரே தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாஜக வேபாலர் காயித்ரி சித்தேஸ்வராவை 26,094 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார் இவர்.
-
தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி பதவியிலிருந்து ஹசீனா சையத் நீக்கம் -
காங்கிரஸ் கட்சியில் இருந்து ஹசீனா சையத் விலகல்! கார்கே, செல்வப்பெருந்தகை மீது ஊழல் குற்றச்சாட்டு -
முதலில் தமிழன், அப்புறம் தான் இந்து! மேலூர் பாஜகவை அதிரவிட்ட வார்த்தை.. பின்னணியில் விகே பாண்டியன்? -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
ஜோசப் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவராக இருக்கணும்.. மீண்டும் தாக்கி பேசிய நயினார் -
முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலர் உமாநாத் மீது நடவடிக்கை கோரி வழக்கு.. ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
துரந்தர் 2.. தமிழ்நாட்டில் தடை செய்ய கோரி வழக்கு தள்ளுபடி ஏன்.. ஐகோர்ட் தீர்ப்பு என்ன -
வானதி சீனிவாசன் ஐசியூவில் அனுமதி.. 3-4 நாட்கள் தொடர் சிகிச்சை தேவையாம்.. என்ன பிரச்சனை? -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
4,379 ஓட்டு ஷாக்! விஜய பிரபாகரன் அப்போ அப்படி பேசிட்டு.. விருதுநகரில் நடந்த அந்த ரகசிய சமரசம் என்ன -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர் -
பெண்களுக்கு மாதம் ₹3000.. வேலையில்லாத ஆண்களுக்கும் உதவி தொகை.. மம்தாவை வீழ்த்த அமித் ஷா மெகா பிளான்












Click it and Unblock the Notifications