தமிழகத்திலிருந்து ஒரு கட்சியே மறைந்தது.. பாஜகவில் ஐக்கியமானது சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்துள்ளார் சரத்குமார். வலிமையான ஆட்சி, வலிமையான அரசு அமைய இணைந்து பயணிப்போம் பாடுபடுவோம் என்று கூறியுள்ளார் சரத்குமார். வருங்கால இளைஞர்களின் நலனுக்காகவும் நன்மைக்காகவும் பாஜகவில் கட்சியை இணைத்துள்ளதாகவும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சரத்குமார் தனது ஆரம்பகால அரசியல் வாழ்க்கையில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்தார். பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். பின்னர் அவர் அதிமுகவிலிருந்து விலகி 2007ஆம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார்.

இதுவரை பல சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற்றிருந்தாலும் அதிமுக கூட்டணியில்தான் பலமுறை தேர்தலை சந்தித்துள்ளார் சரத்குமார். தேர்தலுக்கு முன்பாக தனித்து போட்டி தனிச்சின்னம் என்று தொண்டர்கள் மத்தியில் பேசினாலும் கடைசியில் அதிமுக கூட்டணியில்தான் போட்டியிடுவார்.
கடந்த 2011, 2016 சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த சமத்துவ மக்கள் கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது. சரத்குமார் 2011ஆம் ஆண்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக சட்டசபைக்குள் நுழைந்தார். 2016ஆம் ஆண்டு திருச்செந்தூர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட சரத்குமார் தோல்வியடைந்தார்.
சினிமாவில் சீனியராக இருந்தாலும் அரசியலில் தன்னை விட பல ஆண்டுகள் ஜூனியரான கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியுடன் கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட உள்ளதாக கூறினார் சரத்குமார்.
இந்த நிலையில் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜக உடன் இணைத்து விட்டார். வலிமையான ஆட்சி, வலிமையான அரசு அமைய இணைந்து பயணிப்போம் பாடுபடுவோம் என்று கூறியுள்ளார் சரத்குமார். வருங்கால இளைஞர்களின் நலனுக்காகவும் நன்மைக்காகவும் பாஜகவில் கட்சியை இணைத்துள்ளதாகவும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications