தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது.. யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?
சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் என 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த 10 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று காங்கிரஸ் வெளியிடுகிறது.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாததால் தேர்தல் களம் அனல் பறக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

தமிழகத்தில் ஆளும் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் முதல் கட்சியாக தொகுதி பங்கீட்டை முடிவு செய்து, முழுமையான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தலுக்கு தயாராகியுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் மட்டுமே இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை.
தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்: இந்த நிலையில், இன்று காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கூறினார். இது தொடர்பாக செல்வ பெருந்தகை கூறுகையில், "தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு கூட்டத்தில், வேட்பாளர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் பேச உள்ளோம்.
இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு தலைவர்களின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு இன்று இரவுக்குள் பட்டியல் வெளியிடப்படும். ஒரு லோக்சபா தொகுதிக்கு 3 பேரை வேட்பாளராக பரிந்துரை செய்துள்ளோம்" என்றார்.
யார் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும்?: காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில், திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, நெல்லை, கிருஷ்ணகிரி,கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுவை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், கடலூரில் கேஎஸ் அழகிரி, மயிலாடுதுறையில் பிரவின் சக்கரவர்த்தி அல்லது திருவாநவுக்கரசு, சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் எம்பி, நெல்லையில் பீட்டர் அல்போன்ஸ், கரூரில் ஜோதிமணி , கன்னியாகுமரியில் விஜய் வசந்த் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
திமுக கூட்டணி கட்சிகள்: தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்-9, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களிலும், மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் போட்டியிடுகின்றன.
இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது. விசிக பானை சின்னத்தில் போட்டியிடுகிறது. திருச்சி தொகுதியில் மதிமுகவும் தனி சின்னத்தில் போட்டியிடுகிறது. திமுக சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
திமுகவில் 11 புதுமுகங்கள்: திமுக வேட்பாளர்களில் ராணி (தென்காசி), முரசொலி (தஞ்சாவூர்), அருண் நேரு (பெரம்பலூர்), ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி), ராஜ்குமார் (கோவை), பிரகாஷ் (ஈரோடு), மலையரசன் (கள்ளக்குறிச்சி), ஆ.மணி (தர்மபுரி), டி.எம்.செல்வ கணபதி (சேலம்), தங்க தமிழ்செல்வன் (தேனி), எம்.எஸ்.தரணிவேந்தன் (ஆரணி) ஆகிய 11 பேர் புதுமுகங்கள் ஆவார்கள்.
கடந்த முறை போட்டியிட்ட செந்தில்குமார் (தர்மபுரி), கவுதம சிகாமணி (கள்ளக்குறிச்சி), எஸ்.ஆர்.பார்த்திபன் (சேலம்), சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி), பழனி மாணிக்கம் (தஞ்சாவூர்), தனுஷ் (தென்காசி) ஆகிய 6 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
அதிமுக, பாஜக: இதேபோல் எதிர்க்கட்சியன அதிமுகவும் முதற்கட்டமாக 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்துள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பாஜக கூட்டணியில் உள்ள டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அமமுக குக்கர் சின்னத்தில் தேர்தலை சந்திக்கிறது.
-
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications