Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி கட்அவுட்டை கும்பிட்டு கண் கலங்கிய பெண்.. சென்னை ரோடு ஷோவில் உருக்கம்.. பரவும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னையில் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவுக்கு ரோடு ஷோ சென்றார். அப்போது நடைபாதையில் இருந்த மோடியின் கட்அவுட்டை பார்த்ததும் ஒரு பெண் செய்த செயல் அனைவரையும் கண்கலங்க வைத்தது.

தமிழகத்தில் வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் இடையே நான்கு முனை போட்டி உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் வேட்பாளர்கள், கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

Lok Sabha Election 2024 Woman worships PM Modi Cutout after she cries with kneel down in Chennai

பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே 6 முறை தமிழகத்தில் வந்து பிரசாரம் செய்துள்ளார். இந்நிலையில் தான் 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நேற்று தமிழ்நாடு வந்தார். சென்னை வந்த பிரதமர் மோடி பிரமாண்டமாக ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் நின்று தொண்டர்கள் அவர் மீது பூக்கள் தூவி வரவேற்றனர்.

சென்னை பனகல் பார்க்கில் இருந்து தேனாம்பேட்டை சிக்னல் வழியாக பாண்டிபஜார் வரை சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவுக்கு பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் பேரணியாக சென்று பாஜகவுக்கு ஓட்டு சேகரித்தார். பாஜகவின் தென்சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம், வடசென்னை வேட்பாளர் பால் கனகராஜ் உள்ளிட்டோருக்கு ஆதரவாக பிரதமர் மோடி ஓட்டு சேகரித்தார்.

ரோடு ஷோவை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, தனது எக்ஸ் தளத்தில், ‛‛சென்னை என் மனதை வென்றது. இந்த ஆற்றல் மிக்க நகரத்தில் இன்றைய ரோட்ஷோ என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். மக்கள் சேவையில் தொடர்ந்து கடினமாக உழைக்கவும், நமது தேசத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்யவும் மக்களின் ஆசிகள் எனக்கு வலுவைத் தருகின்றன. சென்னையில் காணப்படும் இந்த உற்சாகம், தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரிய அளவில் ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்பதை காட்டுவதாக உள்ளது'' என நீண்ட பதிவை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பிரதமர் நரேந்திர மோடியின் ரோட் ஷோவுக்காக சிறிய வகையிலான ஏராளமான கட்அவுட்டுகள் வைக்கப்பட்டு இருந்தன. அதில் பிரதமர் மோடி மற்றும் சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் போட்டியிடும் பாஜகவினரின் போட்டோக்கள் இடம்பெற்றிருந்தன. அந்த வகையில் சென்னை மத்திய தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் பிரதமர் மோடியுடன் சேர்ந்து இருக்கும் கட்அவுட் நடைபாதையில் இருந்தது.

இதனை பார்த்த பெண் ஒருவர் தான் அணிந்திருந்த செருப்பை கழற்றிவிட்டு நடைபாதையில் முட்டிப்போட்டு பிரதமர் மோடியின் கட்அவுட்டை பார்த்து கண்கலங்கி வணங்கினார். மேலும் அவர் தனது குறைகளை சொல்லி சேலையை விரித்து மடிப்பிச்சை கேட்டார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி கண்கலங்க செய்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+