Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2024 தேர்தல் முடிவுகளை மாற்றி அமைத்த Influencers! மில்லியன் வீயூஸ் மூலம் மிரட்டிய இளைஞர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த 2024 மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் Influencers ஆக மாறியுள்ளனர். அவர்கள் யார்?

இந்த மக்களவைத் தேர்தல் அரசியல் களத்தில் ஆளும் கட்சி சார்பில் மோடியும் எதிர்க்கட்சி சார்பில் ராகுலும் மட்டும் செல்வாக்கு செலுத்தவில்லை. இவர்கள் பின்னால் இந்த நாட்டின் அரசியலை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்தவர்கள் இருக்கிறார்கள்.

lok sabha election 2024 DMK alliance youtube Dhruv Rathee madan gowri

அவர்கள் யார்? வேறு யாரும் இல்லை. அவர்கள் அனைவரையும் ஒரே டேக் போட்டு அதற்குள் அடக்கிவிடலாம். அவர்களின் பெயர் Influencers. சமூக ஊடகங்கள் வழியே மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தி வரும் இவர்கள்தான் பல மாநிலங்களில் ஒரு கட்சியின் வெற்றியையும் மற்றொரு கட்சியின் தோல்வியையும் தீர்மானித்திருக்கிறார்கள்.

அந்தப் பட்டியலில் முதல் நபராக நிற்பவர் துருவ் ரதீ. கடந்த காலங்களில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு எப்படி உள்ளது? என்ன படிக்கலாம்? எங்கே வேலைக்குப் போகலாம் எனப் பாடம் நடத்தி வந்த இந்த யூடியூபர், இந்த மக்களவைத் தேர்தலில் மாபெரும் அரசியல் செல்வாக்கு கொண்டிருந்த மோடியின் இமேஜை சுக்கு நூறாக உடைத்தவர்.'

lok sabha election 2024 DMK alliance youtube Dhruv Rathee madan gowri

அவர், மோடியின் சர்வாதிகாரம் எப்படிச் செயல்படுகிறது? அவர் தன்னை ஏழைத்தாயின் மகன் என்று சொல்வதில் உண்மை உள்ளதா? உண்மையில் குஜராத்தில் மோடி டீ விற்றாரா? என ஆயிரக்கணக்கான சந்தேகங்களுக்கு ஆதாரப்பூர்வமான உண்மைகளைத் தேடி, தொடர்ந்து காணொளிகளை வெளியிட்டார்.

அவர் இந்தியில் வெளியிட்ட வீடியோ அவரது மொழியைக் கடந்த பல நாடுகள், பல மாநிலங்களைப் போய்ச் சேர்ந்தது. அவரது வீடியோவை ஒரே நாளில் ஒரு கோடி பேருக்கும் மேல் பார்த்தனர்.

அதன் விளைவாக இந்தி மார்க்கெட்டில் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த ரதீ, இப்போது தமிழ், தெலுங்கு எனத் தென்னிந்திய மொழிகளில் தனது புதிய சானல்களை தொடங்கி இருக்கிறார்.

இந்த மக்களவைத் தேர்தல் மோடிக்கு மட்டும் வெற்றியைத் தேடித் தரவில்லை. அதைத்தாண்டி இந்த ரதீ மாதிரியான Influencer marketing துறையில் கோலோச்சி வரும் பலரை உச்சத்திற்கு உயர்த்தியுள்ளது.

lok sabha election 2024 DMK alliance youtube Dhruv Rathee madan gowri

வடமாநிலங்களில் மாபெரும் Influencer ஆக இருக்கும் ரதீயைப் போல தமிழ்நாட்டில் ஒருவர் திடீரென்று தேர்தலை ஒட்டி அரசியல் வீடியோக்களை வெளியிட ஆரம்பித்தார். அவர் யார் என்கிறீர்களா? வேறு யார்? மதன் கெளரிதான்.

அதற்காகவே பிராட்காஸ்டிங் தொடங்கி அண்ணாமலையைப் பேட்டி எடுத்தார். அவர் எடுத்த இந்தப் பேட்டி கிட்டத்தட்ட 2.3 மில்லியன் வீயூஸ் போய் உள்ளது.

சீமானை இவர் எடுத்த பேட்டி 1.9 மில்லியன் போய் உள்ளது. இப்படி இவர் கனிமொழி, ஜெயக்குமார், சு.வெங்கடேசன் என்று பலரையும் எடுத்துப் போட்டுள்ளார். அவ்வளவும் லட்சக்கணக்கான பார்வையாளர்களைப் போய்ச் சேர்ந்துள்ளது.

இதன் மூலம் மதன் கவுரி அரசியல் Influencer ஆகவும் களம் கண்டுள்ளார். அவரால் வாக்காளர்கள் பலரை மனமாற்றம் செய்ய வைக்க முடிந்துள்ளது. ஆனால், அவை வாக்குகளாக மாறியதா? வெற்றிக்கு உதவியதா என்பது எல்லாம் மிகப்பெரிய கேள்வி.

ஏனென்றால், மில்லியன் வீயூஸ் போன அண்ணாமலையால் கோவையில் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் உபி இளைஞர் துருவ் ரதீ, போட்ட வீடியோவால் பாஜக பாதிக்குப் பாதி மக்களவை உறுப்பினர்களை இழந்துள்ளது.

அந்தவகையில் துருவ், கொள்கை ரீதியாகவே பாஜக எதிர்ப்பாளராக இருந்துவருகிறார். ஆனால், மதன் கவுரி பணம் பெற்றுக் கொண்டு வெறுமனே செல்வாக்கு செலுத்துபவராக வலம் வருகிறார். ஆகவேதான், அவரது வீடியோவை பலர் ஒரு பொழுது போக்கு அம்சமாகப் பார்த்துவிட்டுக் கடந்துள்ளனர்.

கிட்டத்தட்ட துருவ் ரதீயின் யூடியூபை பின் தொடர்பவர்களாக 20.8 மில்லியன் பேர் உள்ளனர்.

lok sabha election 2024 DMK alliance youtube Dhruv Rathee madan gowri

இவரைப் போலவே ரன்வீர் அல்லபாடியா. சும்மா மொழு மொழு என குழந்தை வைத்துள்ள இந்த இளைஞர் பல அரசியல் தலைவர்களைப் பேட்டிகளை எடுத்து வெளியிட்டு வருகிறார். குறிப்பாக ஸ்மிருதி இரானி முதல் பலரை இவர் பேட்டிக் கண்டுள்ளார். அவ்வளவு லட்சக் கணக்கான பார்வையாளர்களை ஆட்டிப் படைத்துள்ளது.

இவர் படப்பட என்று ஆங்கிலத்திலும் இந்தியிலும் பேசும் ஆற்றல் கொண்டவர். இவர் லொடலொட என பேசுவதைப் பார்ப்பவர்கள் இவர் மீது மொழியைக் கடந்து ஈர்ப்புக் கொண்டு விடுவார்கள். இவரது சானலுக்கு 8.03 மில்லியன் பேர் பின் தொடர்பவராக இருந்து வருகின்றனர்.

தேர்தலை ஒட்டி இவர் மோடியின் பல திட்டங்களை பாராட்டி வீடியோக்களை வெளியிட்டுள்ளார். தனக்கு எந்த அரசியல் சார்பு இல்லை என்றும் யாருடனும் உரையாடத் தான் தயாராக இருப்பதாகச் சொல்லும் ரன்வீர் யூடியூப் உலகில் பக்கா Influencer . பணம்தான் அவரது கொள்கை, தெய்வம் எல்லாம்.

இவர்களைப் போலவே அபி அண்டு நியு என்ற இந்திய அளவில் பிரபலமான Influencer ஒருவர் உள்ளார். அவரை 6 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். அவர் மோடி பற்றி, நிதிஷ் பற்றி, சந்திரபாபு நாயுடு பற்றிப் பல அரசியல் வீடியோகளை வெளியிட்டுள்ளார்.

இப்படி உள்ளவர்களால் கூட இந்திய அரசியலில் ஒரு செல்வாக்கைச் செலுத்த முடிந்துள்ளது. இதுவரை ஊடகம் என்பது ஒரு நிறுவனம் சார்ந்து இயங்கி வந்தது. அதில் பலரது கருத்துகள் எதிரொலிக்கும். ஆனால், இப்போது தனிப்பட்ட நபர்கள் நாட்டில் உள்ள மக்களின் மனங்களை அசைக்கக் கூடியவர்களாக மாறியுள்ளனர். அதுவும் பணத்திற்காக. இது எந்த அளவுக்கு ஜனநாயகத்திற்கு நல்லது?

காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+