15 தொகுதிகளில் அதிமுகவை நேருக்கு நேர் சந்திக்கும் அமமுக… சொல்லி அடிக்கும் டிடிவி தினகரன்
Recommended Video

சென்னை:லோக்சபா தேர்தலில் அதிமுகவும், அமமுகவும் நேருக்கு நேராக 15 தொகுதிகளில் மோதுகின்றன. இந்த தேர்தலில் இவ்விரு கட்சிகளின் வெற்றி தோல்வி முக்கியமாக பார்க்கப்படுகிறது.
அதிமுகவும் திமுகவும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக, பாஜக, தமாகா, என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், பாரிவேந்தரின் ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன.

எங்கு என்று அறிவிப்பு
பெரும் பரபரப்பான நிலையில் அதிமுக போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கிரவுண் பிளாசா ஹோட்டலில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் முன்னிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கூட்டணியின் தொகுதி விவரங்களை அறிவித்தார்.

அதிமுக தொகுதிகள்
சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருப்பூர், பொள்ளாச்சி, ஆரணி, திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளில் அதிமுக நேரடியாக போட்டியிடுகிறது. இதேபோன்று, சிதம்பரம், பெரம்பலூர், தேனி, மதுரை, நீலகிரி, திருநெல்வேலி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தென்சென்னை என மொத்தம் 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.

அமமுக பட்டியல் வெளியீடு
அதிமுகவை தோற்கடித்தே ஆக வேண்டும் என்று சூளுரைத்துள்ள அமமுகவும் தொகுதி பட்டியலை அறிவித்துள்ளது. முதற்கட்டமாக, 24 லோக்சபா தொகுதிகளுக்கும், 9 சட்டசபை தொகுதிகளுக்கும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அக்கட்சி வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:
திருவள்ளூர் (தனி) - பொன்.ராஜா
தென்சென்னை - இசக்கி சுப்பையா
ஸ்ரீபெரம்புதுார் - நாராயணன்
காஞ்சிபுரம்(தனி) - முனுசாமி
விழுப்புரம்(தனி) - வானுார் கணபதி
சேலம் - எஸ்.கே.செல்வம்
நாமக்கல் - பி.பி.சாமிநாதன்
ஈரோடு - செந்தில்குமார்
திருப்பூர் - எஸ்.ஆர்.செல்வம்
நீலகிரி(தனி) - எம்.ராமசாமி
கோவை - அப்பாதுரை
பொள்ளாச்சி - எஸ்.முத்துக்குமார்
கரூர் - என்.தங்கவேல்
திருச்சி - சாருபாலா தொண்டைமான்
பெரம்பலூர் - ராஜசேகரன்
சிதம்பரம்(தனி) - இளவரசன்
மயிலாடுதுறை - எஸ்.செந்தமிழன்
நாகை - செங்கொடி
தஞ்சை - முருகேசன்
சிவகங்கை - பாண்டி
மதுரை - டேவிட் அண்ணாதுரை
ராமநாதபுரம் - ஆனந்த்
தென்காசி(தனி) - ஏ.எஸ்.பொன்னுத்தாய்
நெல்லை - ஞான அருள்மணி
ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். 24 தொகுதிகளில் 15 தொகுதிகளில் அதிமுகவும், அமமுகவும் நேரடியாக களம் காண்கின்றன.

அதிமுக, அமமுக மோதல்
அதன்படி திருவள்ளூர், தென்சென்னை, காஞ்சிபுரம், நாமக்கல், ஈரோடு, சேலம், சிதம்பரம், மயிலாடுதுறை, பெரம்பலூர், நாகப்பட்டினம், மதுரை, திருநெல்வேலி, நீலகிரி, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக, அமமுக இடையே போட்டி நிலவுகிறது.

தொண்டர்கள் யார் பக்கம்?
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெறும் லோக்சபா தேர்தல் என்பதால் அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பது இந்த தேர்தலில் முழுமையாக தெரிந்து விடும். ஆகையால் மற்ற கட்சிகளை விட... அதிமுக, அமமுக இடையே இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications