கணக்கு இடிக்குதே.. பாஜக வெற்றி இருக்கட்டும்.. எக்சிட் போலில் இவ்வளவு தவறு இருக்கே.. அது எப்படிங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு மெஜாரிட்டி வரும் என்று பெரும்பாலான கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த கணிப்புகளில் சில தவறுகளும் உள்ளன.

கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது.

Lok Sabha election 2024 BJP Congress 2024

இந்த நிலையில் தற்போது 2024 லோக்சபா தேர்தலுக்கான எக்சிட் போல் கணிப்புகள் உள்ளன. இந்த முறை மொத்தமாக பாஜகவின் என்டிஏ கூட்டணி 339-340 இடங்களை வெல்லலாம், அதாவது லேசான சறுக்கல் இருக்கலாம் என்று கணிப்புகள் கூறுகின்றன. இதன் மூலம் பாஜக மீண்டும் ஆட்சி மீண்டும் அமையும் என்று கணிப்புகள் கூறுகின்றன.

அதே சமயம் எதிர்க்கட்சி கூட்டணி 151-164 இடங்களில் வெல்லும் வாய்ப்புகள் இருப்பதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. மற்ற கட்சிகள் 15- 25 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக இருப்பதாக கணிப்புகள் தெரிவித்துள்ளன.

தவறுகள்: ஆனால் இந்த கணிப்புகளில் சில தவறுகளும் உள்ளன. அடிப்படையாக இடங்கள் ரீதியாக, பங்கீடு ரீதியாக குழப்பங்கள், தவறுகள் உள்ளன.

பீகார் குழப்பம்: உதாரணமாக லோக் ஜன சக்தி கட்சி பீகாரில் பாஜக கூட்டணியில் உள்ளது. அங்கே 5 இடங்களில் இவர்கள் போட்டியிடுகின்றனர். ஆனால் இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பில் லோக் ஜன சக்தி கட்சிக்கு 6 இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. 5 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் அந்த கட்சி வெல்ல உள்ளதாம்.

காங்கிரஸ் தமிழ்நாடு குழப்பம்: தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் போட்டியிடுகிறது. ஆனால் ஆஜ் தாக் கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 13-15 இடங்களில் வெற்றி என்று கொடுக்கப்பட்டு உள்ளது. அது எப்படி என்ற குழப்பம் உள்ளது. கடந்த 2 தேர்தல்காக தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் இவ்வளவு இடங்களில் காங்கிரஸ் போட்டியிடாத போது எப்படி இந்த நம்பர் வந்தது?

மகாராஷ்டிரா குழப்பம்: இந்தியா டுடே, ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போல் கணிப்பில் சிவசேனா ஏக்நாத் ஷிண்டேவிற்கு 8-10 இடங்களையும், சிவசேனா உத்தவ் தாக்கரேவுக்கு 9-11 இடங்களையும் கொடுத்துள்ளது. இதில் காமெடியான விஷயம் சிவசேனா ஏக்நாத் ஷிண்டே கட்சி 15 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் 13 இடங்களில் அந்த கட்சி சிவசேனா உத்தவ் தாக்கரேவுக்கு போட்டியிடுகிறது.

அப்படி இருக்க இரண்டு கட்சியும் இத்தனை இடங்களை வெல்ல வாய்ப்பே இல்லை. லாஜிக் படி பார்த்தால் ஒன்று அதிகம் வென்றால் இன்னொன்று குறைவாக வெல்ல வேண்டும். இரண்டும் அதிக இடங்களில் நேருக்கு நேர் மோதும் போதும் இரண்டும் எப்படி அதிக இடங்களில் வெல்ல முடியும்.

கேள்வி; தமிழ்நாட்டில் அதிமுகவை விட பாஜக பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 33- 37 இடங்களில் வெல்லும். பாஜக கூட்டணி 2-4 இடங்களில் வெல்லும். அதிமுக கூட்டணி 0-2 இடங்களில் வெல்லும் என்று ஆக்சிஸ் மை இந்தியா தெரிவித்துள்ளது. பாஜக கூட்டணி 22 சதவிகிதம் வாக்குகளையும் அதிமுக கூட்டணி 21 சதவிகிதம் வாக்குகளையும் திமுக கூட்டணி 46 சதவிகிதம் வாக்குகளையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதுவும் எப்படி அரசியல் ரீதியாக சாத்தியம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+