இன்னும் 4 நாள் தான்.. தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ல் தொடக்கம்.. ஏப். 19 வாக்குப்பதிவு!
சென்னை: லோக்சபா தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் வரும் மார்ச் 20ஆம் தேதி தொடங்குகிறது.
இந்தியாவில் வரும் ஜூன் 6ஆம் தேதியுடன் மத்தியில் ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில், தேர்தல் நடைபெறும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மார்ச் 20-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும், மார்ச் 27-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 28-ந் தேதி வேட்புமனு பரிசீலனையும், மார்ச் 30-ந் தேதி வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தேர்தல்: 39 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டிற்கும், 1 நாடாளுமன்றத் தொகுதியை கொண்ட புதுச்சேரிக்கும் ஒரே கட்டமாக, அதுவும் முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 6,18,90,348 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3,30,96,330; பெண் வாக்காளர்கள் 3,41,85,724 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8,294 பேர்.
மேலும் மார்ச் 20-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும், மார்ச் 27-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 28-ந் தேதி வேட்புமனு பரிசீலனையும், மார்ச் 30-ந் தேதி வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களில் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இன்னும் சரியாக 32 நாட்களில் தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன் பிறகு 45 நாட்கள் கழித்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் தேர்தல் அட்டவணை
மார்ச் 20 ஆம் தேதி : வேட்புமனு தாக்கல் தொடக்கம்
மார்ச் 27 : வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்
மார்ச் 28: வேட்பு மனுக்கள் பரிசீலனை
மார்ச் 30 : வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள்
ஏப்ரல் 19 : தமிழ்நாடு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு
ஜூன் 4 : வாக்கு எண்ணிக்கை (ரிசல்ட்)












Click it and Unblock the Notifications