கோடீஸ்வரர்கள் எத்தனை பேர்? குற்ற வழக்கில் இருப்பவர்கள் எத்தனை பேர்?
சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் களத்தில் உள்ள வேட்பாளர்களைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன. கோடீஸ்வரர்கள் எத்தனைப் பேர்? குற்ற வழக்குகளில் உள்ளவர்கள் எத்தனை பேர்? படித்த பட்டதாரிகள் எத்தனை பேர்? போன்ற விவரங்கள் கிடைத்துள்ளன.
நாடு முழுவதும் 18 ஆவது மக்களவைத் தேர்தல் மொத்தம் 543 தொகுதிகளில் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம் சிக்கிம் மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றன.
இதனையடுத்து அனைத்து தொகுதிகளின் வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி மீண்டும் உபியில் உள்ள வாரணாசி தொகுதியில் போட்டியிட்டுள்ளார். காங் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் உபியில் உள்ள ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
இந்தத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் ராகுல் காந்தி முன்னிலை வகித்து வருகிறார். பிரதமர் மோடி, ஆரம்பக் கட்டத்தில் முன்னிலையிலிருந்த பிரதமர், காலை 9.45 மணி நிலவரப்படி அவர் பின்னடைவைச் சந்தித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை 9.45 மணி தகவலின்படி தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான 36 தொகுதிகளில் முன்னிலையிலிருந்து வருகிறது. நாடு முழுவதும் பாஜக கூட்டணி 284 தொகுதிகளில் முன்னிலையிலிருந்து வருகிறது. காங்கிரஸ் 215 தொகுதிகளில் முன்னிலை வகுத்து வருகிறது.
இந்நிலையில் இந்தத் தேர்தலில் வேட்பாளர்களாகக் களத்தில் போட்டியிட்டு வருபவர்கள் பற்றிய சில சுவாரஸ்யமான விவரங்கள் கிடைத்துள்ளன.
நாடு முழுவதும் களத்தில் உள்ளவர்களில் 2573 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் என்று தெரிகிறது. அதில் 436 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவி இருந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

அதேபோல் பல காலமாகப் படித்தவர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்ற குரல் பலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தத் தேர்தலில் களத்தில் வேட்பாளர்கள் 4013 பேர் பட்டதாரிகள் எனத் தெரியவந்துள்ளது. அதில் 330 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியிலிருந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்ததாகக் களத்தில் வேட்பாளராக உள்ள 1643 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அதில் 217 பேர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதும் தெரியவந்துள்ளது
இந்த 2024 மக்களவைத் தேர்தலில் 324 நாடாளுமன்ற உறுப்பினர்கள் போட்டிப்போடுகின்றனர். அதில் 196 பேர் சிட்டிங் எம்பி ஆக உள்ளவர்கள் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.












Click it and Unblock the Notifications