லோக்சபாவில் குறைந்த முஸ்லீம் எம்பி-கள்.. தேர்தலில் கட்சிகளின் பாரபட்சம்? 2014க்கு பின் நடந்த மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : 543 எம்பி-க்களை கொண்டுள்ள லோக்சபாவில் 26 இஸ்லாமிய எம்பி-க்கள் மட்டுமே தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டனி 292 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 232 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இதனால் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு கட்சிகளின் வாக்கு சதவிகிதமும், எம்பி-க்களின் பிரநிதிதித்துவம் குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.

Lok Sabha Election 2024 Lok Sabha Election Result 2024 BJP Congress Muslims 2024 2024

அதன்படி 18வது லோக்சபா தேர்தலில் மொத்தமாக 26 இஸ்லாமிய எம்பி-க்கள் நாடாளுமன்றம் செல்கின்றனர். லோக்சபாவில் மொத்தவுள்ள 543 எம்பி-க்களில் வெறும் 26 பேர் மட்டும் இஸ்லாமிய எம்பி-க்கள் என்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவிலும் இஸ்லாமிய எம்பி-க்களின் எண்ணிக்கையும் 26ஆக இருந்தது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அதே எண்ணிக்கையிலான இஸ்லாமிய எம்பி-க்களே நாடாளுமன்றம் செல்கின்றனர்.

லோக்சபா வரலாற்றில் 2014ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தான் குறைந்த அளவிலான இஸ்லாமிய எம்பி-க்களே நாடாளுமன்றம் சென்றனார். அப்போதைய எண்ணிக்கை 22ஆக இருந்தது. அதேபோல் 1980 லோக்சபா தேர்தலில் மொத்தமாக 49 இஸ்லாமிய எம்பி-க்களே தேர்வு செய்யப்பட்டதாக அதிகபட்ச எண்ணிக்கையாகும். இந்தியாவில் 2வது அதிகபட்ச வாக்கு வங்கியையும் வைத்திருந்தாலும் இஸ்லாமிய எம்பி-க்களின் பிரதிநிதித்துவம் 10 சதவிகிதம் கூட இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் இந்தியாவில் உள்ள பல்வேறு தொகுதிகளிலும் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க கூடிய சக்தியாக இஸ்லாமிய மக்கள் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் கடந்த 10 ஆண்டுகளில் முக்கிய கட்சிகள் இஸ்லாமியர்களை வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதையும் குறைத்து வருகிறது. 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 34 இஸ்லாமியர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தது. ஆனால் 2024 லோக்சபா தேர்தலில் வெறும் 19 இஸ்லாமியர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்துள்ளது.

அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 2019 லோக்சபா தேர்தலில் 13 பேருக்கு வாய்ப்பு கொடுத்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை வெறும் 6ஆக குறைந்துள்ளது. இதில் சமாஜ்வாதி கட்சியும் இணைந்துள்ளது. கடந்த தேர்தலில் 8 இஸ்லாமிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தது. இந்த தேர்தலில் 4 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் 2019 லோக்சபாவில் இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் மொத்தமாக 115 இஸ்லாமிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தது. ஆனால் 2024 லோக்சபா தேர்தலில் மொத்தமாக 78 பேருக்கு மட்டுமே இந்த கட்சிகள் வாய்ப்பு கொடுத்துள்ளன. அதேபோல் 2014ல் பகுஜன் சமாஜ் கட்சி 61 இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு கொடுத்த போதும், இந்த தேர்தலில் 35 பேருக்கு மட்டுமே போட்டியிட அனுமதித்துள்ளது.

இதற்கான காரணம் குறித்து அரசியல் ஆய்வாளர்கள் கூறுகையில், 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னரே மற்ற கட்சிகள் இந்த முடிவை எடுக்க தள்ளப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. இது மாற்றம் பெறுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் கூறுகின்றனர். அதேபோல் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தியே வாக்களித்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+