Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களில் அதிக ஓட்டு வாங்கியது யார்னு பாருங்க.. லிஸ்ட்ல இவருதான் டாப்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பாஜக 19 இடங்களில் போட்டியிட்ட நிலையில் அனைத்திலும் தோல்வி அடைந்தது. அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் தோல்வியை தழுவினார். தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணிக்கையை பார்க்கலாம்.

நாடு முழுவதும் நடந்து முடிந்த 18-வது லோக்சபாவிற்கான தேர்தலில், தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி தனித்தும் என 4 முனைப் போட்டி நிலவியது.

lok-sabha-election-results-2024-who-get-the-most-votes-among-the-bjp-candidates-in-tamil-nadu

தமிழகத்தில் திமுக தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில், திமுக 21, காங்கிரஸ் 9, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2, ம.தி.மு.க. 1, விடுதலை சிறுத்தைகள் கட்சி 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 1 இடங்களில் போட்டியிட்டன. புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் களம் கண்டது.

அதிமுக கூட்டணியில், அதிமுக 32, தேமுதிக 5, புதிய தமிழகம் கட்சி 1, எஸ்.டி.பி.ஐ. கட்சி 1 இடங்களில் போட்டியிட்டது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 19, பாமக 10, தமிழ் மாநில காங்கிரஸ் 3, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். 2, இந்திய ஜனநாயக கட்சி 1, புதிய நீதிக்கட்சி 1, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் 1, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1, ஓ.பன்னீர்செல்வம் அணி 1 இடம் என போட்டியிட்டன.

தமிழகத்தில் புதுவை உள்பட 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி அள்ளியது. பல நட்சத்திர வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். கோவை தொகுதியில் அண்ணாமலை தோல்வியை தழுவினார். பாஜக போட்டியிட்ட 24 இடங்களிலும் தொல்வியை தழுவியது. எனினும் 10 இடங்களில் இரண்டாம் இடம் பிடித்தது.

பாஜக வேட்பாளர்களில் அதிக வாக்குகள் வாங்கியது என்று பார்த்தால் அண்ணாமலைதான். கோவை தொகுதியில் 2 ஆம் இடம் பிடித்த அண்ணாமலை 4,50,132 வாக்குகள் வாங்கியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட பொன் ராதாகிருஷ்ணன் பெற்றுள்ளார். பொன் ராதாகிருஷ்ணன் 3,66,341 வாங்கினார். பாஜக வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டுக்கள் விவரம் வருமாறு:-

* அண்ணாமலை (கோவை) - 4,50,132
* நயினார் நாகேந்திரன் (நெல்லை) - 3,36,676
* தமிழிசை (தென் சென்னை) - 2,90,683
* எல் முருகன் (நீலகிரி) - 2,32,627

* பாலகணபதி (திருவள்ளூர்) - 2,24,801
* வசந்த ராஜன் (பொள்ளாச்சி) - 2,23,354
* நரசிம்மன் (கிருஷ்ணகிரி) - 2,14,125
* ராமசீனிவாசன் (மதுரை) - 2,20,914

* ஏபி முருகானந்தம்(திருப்பூர்) - 1,85,322
* கருப்பு முருகானந்தம் (தஞ்சாவூர்) - 1,70,613
* மனோஜ் பி செல்வம் (மத்திய சென்னை) - 1,69,159

* கார்த்தியாயினி (சிதம்பரம்) - 1,68,493
* ராதிகா சரத்குமார் (விருதுநகர்) - 1,64,149
* அஸ்வத்தாமன் (திருவண்ணாமலை) -1,56,650

* பால் கனகராஜ் (வட சென்னை)- 1,13,318
* விவி செந்தில் நாதன்(கரூர்) - 1,02,482
* கேபி ராமலிங்கம் (நாமக்கல்) - 1,04,690
* எஸ் ஜி எம் ரமேஷ் (நாகை)- 1,02,173.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+