திருவள்ளூர் வேட்பாளரை மாற்ற வேண்டும்.. தமிழக காங்கிரசில் குழப்பம்.. 2 பேர் தீக்குளிக்க முயற்சி!
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி, திருவள்ளூர் தொகுதி வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் சென்னை சத்தியமூர்த்தி பவனில் போராடி வருகிறார்கள்.
சென்னை: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி திருவள்ளூர் தொகுதி வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் சென்னை சத்தியமூர்த்தி பவனில் போராடி வருகிறார்கள். இதில் இரண்டு பேர் அங்கு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்காக தமிழக அரசியல் களம் பெரிய பரபரப்பாக இருக்கிறது. தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இதில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் ஒன்றாக இடம் பிடித்து இருக்கிறது.
இந்த கூட்டணிக்கு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 10 இடங்களில் போட்டியிட இருக்கிறது.

வேட்பாளர் அறிவிப்பு
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்: திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி,கரூர், சிவகங்கை, திருச்சி, தேனி, விருதுநகர், குமரி, புதுச்சேரி, ஆகும்.இதற்கான வேட்பாளர்கள் நேற்று முதல்நாள் இரவு அறிவிக்கப்பட்டார். சிவகங்கை தொகுதிக்கு மட்டும் காங்கிரஸ் கட்சி இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

என்ன கோரிக்கை
இந்த நிலையில் திருவள்ளூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்து இருக்கிறது. திருவள்ளூர் தனித் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஜெயக்குமார் போட்டியிடுகிறார். ஆனால் இவருக்கு பதிலாக திருவள்ளூரில் காங்கிரஸ் ஏஸ்சி/எஸ்டி பிரிவு மாநிலத் தலைவர் செல்வபெருந்தகைக்கு வாய்ப்பு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தீக்குளிப்பு
இதற்காக இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி முன்பு சென்னை சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் நடந்தது. அங்கு செல்வப்பெருந்தகை ஆதரவாளர்கள், தொண்டர்கள் ராஜவேல், சீனு ஆகியோர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ்
அதேபோல் சென்னை சத்தியமூர்த்தி பவனில் செல்வப்பெருந்தகை ஆதரவாளர்கள் பலர் செய்த போராட்டத்தால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து தற்போது அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள் . அங்கு மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
-
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன?












Click it and Unblock the Notifications