அந்த 5 தொகுதிகளில் யார் போட்டி? பாஜக வேட்பாளர் பட்டியல்.. இன்று வெளியாகிறது?
லோக்சபா தேர்தலில் பாஜக தமிழகத்தில் போட்டியிடும் ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக இருப்பதாக தகவல்கள் வருகிறது.
Recommended Video

சென்னை: பாஜக தமிழகத்தில் போட்டியிடும் ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக இருப்பதாக தகவல்கள் வருகிறது.
அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள் மற்றும் கூட்டணியில் இடம்பெறுள்ள பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று அதிமுக சார்பாக போட்டியிட போகும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. அதன்பின் பாமக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.

அறிவிக்கவில்லை
ஆனால் இன்னும் பாஜக சார்பாக போட்டியிட போகும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை. அதிமுக கூட்டணியில் பாஜக மொத்தம் 5 இடங்களில் போட்டியிடுகிறது. கன்னியாகுமரி, சிவகங்கை, கோவை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ளது. இங்கு பாஜக சார்பாக யார் போட்டியிட இருக்கிறார்கள் என்பதுதான் பெரிய கேள்வியாக உள்ளது.

நேற்று தயார்
இதற்கான பட்டியல் நேற்றே தயாராகிவிட்டது.இதற்கான பட்டியலை நேரு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இறுதி செய்தார்.இந்த பட்டியலை நேற்று அவர் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிடம் டெல்லியில் அளித்தார்.

அறிவிப்பு
பாஜக தேசிய தலைமை இந்த பட்டியலையோ ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று பாஜக பல்வேறு மாநிலங்களில் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது. அதன்படி தற்போது தமிழகத்தில் போட்டியிடும் 5 பாஜக வேட்பாளர்களையும் பாஜக அறிவிக்க இருக்கிறது.

யார்
காலை 11 மணி அளவில் இந்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக சார்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் போட்டியிட வாய்ப்புள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications