இன்றாவது வருமா? தொடர்ந்து தள்ளிப்போகும் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. என்ன நடக்கிறது?
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகாமல் தொடர்ந்து தள்ளிப்போய்கொண்டு இருக்கிறது.
Recommended Video

சென்னை: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகாமல் தொடர்ந்து தள்ளிப்போய்கொண்டு இருக்கிறது. பாஜக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதிமுக கூட்டணியில் பாஜக மொத்தம் 5 இடங்களில் போட்டியிடுகிறது.
லோக்சபா தேர்தலில் பாஜக தமிழகத்தில் போட்டியிடும் ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும் என்பதுதான் பெரிய கேள்வியாக இருக்கிறது. இதற்கான பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படாமல் இருக்கிறது.

மற்ற கட்சிகள் அறிவித்தது
அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள் மற்றும் கூட்டணியில் இடம்பெறுள்ள பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முதலில் அதிமுக சார்பாக போட்டியிட போகும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. அதன்பின் பாமக வேட்பாளர்களின் 7 பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. அதன்பின் தேமுதிகவின் 4 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.

எங்கு போட்டி
ஆனால் பாஜக சார்பாக போட்டியிட போகும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படாமல் இருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜக மொத்தம் 5 இடங்களில் போட்டியிடுகிறது. கன்னியாகுரி, சிவகங்கை, கோவை, ராநாதபுரம், தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ளது.

இறுதி இல்லை
பாஜக வேட்பாளர் பட்டியல் இரண்டு நாட்களுக்கு முன்பே தயாராகிவிட்டது. இந்த பட்டியல் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படாமல் இருக்கிறது.

மாறுதல்கள்
பாஜக தேசிய தலைமை இந்த பட்டியலை ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை. அதனால் இதில் இறுதிக்கட்ட மாறுதல்கள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இன்று மாலைக்குள் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு இன்று பட்டியல் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications