பாஜக வேட்பாளர் பட்டியல்.. இன்று வெளியாகிறது.. தமிழிசை, எச். ராஜா போட்டி?
லோக்சபா தேர்தலில் பாஜக தமிழகத்தில் போட்டியிடும் ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று காலை வெளியாகிறது.
சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜக தமிழகத்தில் போட்டியிடும் ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று காலை வெளியாகிறது. டெல்லியில் இதற்கான அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.
அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதிமுக கூட்டணியில் பாஜக மொத்தம் 5 இடங்களில் போட்டியிடுகிறது.

இந்த நிலையில் அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள் மற்றும் கூட்டணியில் இடம்பெறுள்ள பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
நேற்று அதிமுக சார்பாக போட்டியிட போகும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. அதன்பின் பாமக வேட்பாளர்களின் 7 பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. அதன்பின் நேற்று மதியம் தேமுதிகவின் 4 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.
ஆனால் பாஜக சார்பாக போட்டியிட போகும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது. அதிமுக கூட்டணியில் பாஜக மொத்தம் 5 இடங்களில் போட்டியிடுகிறது. கன்னியாகுரி, சிவகங்கை, கோவை, ராநாதபுரம், தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ளது.
இங்கு பாஜக சார்பாக யார் போட்டியிட இருக்கிறார்கள் என்பதுதான் பெரிய கேள்வியாக இருந்தது. இதற்கான பட்டியல் நேற்று முதல்நாளே தயாராகிவிட்டது. இதற்கான பட்டியலை நேற்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இறுதி செய்தார். இந்த பட்டியலை நேற்று அவர் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிடம் டெல்லியில் அளித்தார்.
பாஜக தேசிய தலைமை இந்த பட்டியலையோ ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று பாஜக பல்வேறு மாநிலங்களில் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது. அதன்படி இன்று காலை 5 தமிழக பாஜக வேட்பாளர்களையும் பாஜக தலைமை டெல்லியில் அறிவிக்க உள்ளது.
பாஜக சார்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் போட்டியிட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications