லோக்சபா தேர்தல்.. இன்றும் வெளியாகவில்லை தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்.. இழுபறி நீடிப்பு
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று காலை வெளியாகிறது.
Recommended Video

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று காலை வெளியாவதாக தகவல்கள் கூறப்பட்டன. ஆனால் மாலை வரை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படாததால் வேட்பாளர்கள் தேர்வில் இழுபறி நீடிப்பதாகவே தெரிகிறது.
லோக்சபா தேர்தலுக்காக தமிழக அரசியல் களம் பெரிய பரபரப்பாக இருக்கிறது. தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது.
இந்த தேர்தலுக்காக திமுக பெரிய கூட்டணி அமைத்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் ஒன்றாக இடம் பிடித்து இருக்கிறது.

என்ன கூட்டணி
இந்த கூட்டணிக்கு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா இரண்டு இடங்களில் போட்டியிடும். மதிமுக, ஐயூஎம்எல், ஐஜேகே, கொங்கு நாடு மக்கள் கட்சி தலா ஒரு இடங்களில் போட்டியிடும். மீதமுள்ள 20 இடங்களில் திமுக போட்டியிடும்.

காங்கிரஸ் எங்கு
இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 10 இடங்களில் போட்டியிட இருக்கிறது. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்: திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி,கரூர், சிவகங்கை, திருச்சி, தேனி, விருதுநகர், குமரி, புதுச்சேரி, ஆகும்.

எப்படி தேர்வு
இதற்கான வேட்பாளர் தேர்வு கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இதற்கான பட்டியல் இருந்து செய்யப்பட்டு டெல்லி தலைமையிடம் கடந்த வாரம் அளிக்கப்பட்டது. தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த பட்டியலை ஏற்றுக்கொண்டுள்ளார்.

அறிவிப்பு
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி இன்று பட்டியலை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாலை வரையிலும் அது குறித்த எந்தவித தகவலும் இல்லை. இதனால் வேட்பாளர் தேர்வில் இழுபறி நிலவுவதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications