சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கனிமொழி.. தயாநிதி.. டி.ஆர் பாலு.. 20 திமுக வேட்பாளர்களின் பட்டியல்.. லிஸ்ட் இதுதான்!

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று காலை வெளியாகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வெளியானது திமுகவின் வேட்பாளர் பட்டியல்

    சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. 20 லோக்சபா தொகுதிகளில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    லோக்சபா தேர்தலுக்காக தமிழக அரசியல் களம் பெரிய பரபரப்பாக இருக்கிறது. தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது.

    இந்த தேர்தலுக்காக திமுக பெரிய கூட்டணி அமைத்துள்ளது. இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

    திமுக கூட்டணி

    திமுக கூட்டணி

    திமுக கூட்டணியில் 10ல் காங்கிரஸ் கட்சி போட்டியிடும். விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா இரண்டு இடங்களில் போட்டியிடும். மதிமுக, ஐயூஎம்எல், ஐஜேகே, கொங்கு நாடு மக்கள் கட்சி தலா ஒரு இடங்களில் போட்டியிடும். மீதமுள்ள 20 இடங்களில் திமுக போட்டியிடும்.

    எங்கு போட்டி

    எங்கு போட்டி

    இதில் திமுக போட்டியிடும் தொகுதிகள் சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளகுறிச்சி, நீலகிரி (தனி), பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, தூத்துக்குடி, தென்காசி (தனி), திருநெல்வேலி , ஸ்ரீபெரும்பதூர் ஆகிய தொகுதிகளில் திமுக போட்டியிடும்.

    ஆசிர்வாதம் செய்தார்

    ஆசிர்வாதம் செய்தார்

    இந்த பட்டியலை வெளியிடும் முன் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னாள் முதல்வர் அண்ணா மற்றும் திமுக முன்னாள் தலைவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் வேட்பாளர் பட்டியலை வைத்து, பின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனிடம் வேட்பாளர் பட்டியலை அளித்து வாழ்த்து பெற்றார்.

    யார் போட்டி

    யார் போட்டி

    திமுக சார்பாக லோக்சபா தேர்தலில் போட்டியிடும் 20 வேட்பாளர்களின் பட்டியல்.

    • சென்னை வடக்கு - டாக்டர். கலாநிதி வீராசாமி,
    • சென்னை தெற்கு - தமிழச்சி தங்கபாண்டியன்,
    • மத்திய சென்னை - தயாநிதி மாறன்,
    • காஞ்சிபுரம் (தனி) - ஜி.செல்வம்
    • அரக்கோணம் -எஸ். ஜெகத்ரட்சகன்
    • வேலூர் - கதிர் ஆனந்த்
    • தருமபுரி - டாக்டர்.எஸ் செந்தில் குமார்
    • திருவண்ணாமலை - சி. என் அண்ணாதுரை
    • சேலம் -எஸ்.ஆர்.பார்த்தீபன்
    • கள்ளகுறிச்சி - கவுதம சிகாமணி
    • நீலகிரி (தனி) - ஆ.ராசா
    • பொள்ளாச்சி - கு.சண்முகசுந்தரம்
    • திண்டுக்கல் - ப. வேலுச்சாமி
    • கடலூர் - டிஆர்விஎஸ் ஸ்ரீரமேஷ்
    • தஞ்சாவூர் - எஸ்.எஸ் பழனிமாணிக்கம்
    • மயிலாடுதுறை - சே.ராமலிங்கம்
    • தூத்துக்குடி - கனிமொழி.எம்.பி
    • தென்காசி (தனி) - தனுஷ்குமார்
    • திருநெல்வேலி - சா. ஞானதிரவியம்
    • ஸ்ரீபெரும்பதூர் - டி.ஆர்.பாலு
    வாழ்த்து பெற்றனர்

    வாழ்த்து பெற்றனர்

    இந்த நிலையில் இந்த 20 வேட்பாளர்களும் தற்போது திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். கனிமொழி, ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் திமுக தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இவர்கள் விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Lok Sabha Elections 2019: DMK chief M K Stalin will release the candidates' list today in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X