சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எந்த கட்சிக்கு எந்த தொகுதி.. திமுக போட்டியிடும் 20 தொகுதிகள் எவை.. இன்று வெளியாகிறது அறிவிப்பு!

லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எந்த தொகுதியில் போட்டியிடும் என்று இன்று அறிவிப்பு வெளியாக உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எந்த தொகுதியில் போட்டியிடும் என்று இன்று அறிவிப்பு வெளியாக உள்ளது. திமுக போட்டியிடும் 20 தொகுதிகள் என்ன என்பது குறித்த அறிவிப்பும் இன்று வெளியாக உள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்டது. லோக்சபா தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி துவங்க உள்ளது. மொத்தம் 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடக்க உள்ளது.

ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தலுக்காக திமுக மிக தீவிரமாக செயலாற்றி வருகிறது.

சபரிமலை விவகாரத்தை பிரசாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி சபரிமலை விவகாரத்தை பிரசாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி

திமுக கூட்டணி அமைத்து

திமுக கூட்டணி அமைத்து

தமிழகத்தில் திமுக மிகப்பெரிய கூட்டணியை அமைத்து இருக்கிறது. தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் திமுகவின் கூட்டணியில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, ஐயூஎம்எல், ஐஜேகே, கொங்கு நாடு மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்று இருக்கிறது.

எத்தனை இடங்கள்

எத்தனை இடங்கள்

அதில் திமுக கூட்டணியில் 10ல் காங்கிரஸ் கட்சி போட்டியிடும். மதிமுக, ஐயூஎம்எல், ஐஜேகே, கொங்கு நாடு மக்கள் கட்சி தலா ஒரு இடங்களில் போட்டியிடும். விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா இரண்டு இடங்களில் போட்டியிடும். மீதமுள்ள 20 இடங்களில் திமுக போட்டியிடும்.

ஆலோசனை செய்தது

ஆலோசனை செய்தது

இந்த நிலையில் எந்த தொகுதியில் எந்த கட்சி போட்டியிட போகிறது. எங்கு எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. நேற்று விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் திமுகவுடன் இதற்காக ஆலோசனை செய்தது.

மீண்டும் ஆலோசனை

மீண்டும் ஆலோசனை

இந்த நிலையில் இன்று மீண்டும் இதற்காக ஆலோசனை நடக்க உள்ளது. இந்த ஆலோசனையின் முடிவில் எந்த கட்சிக்கு எந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்படும். அதேபோல் திமுக எந்த 20 தொகுதியில் போட்டியிடும் என்பது குறித்தும் அறிவிக்கப்பட உள்ளது.

English summary
Lok Sabha Elections 2019: DMK Chief M K Stalin will announce constituencies for alliance parties today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X