தொகுதி கிடைத்ததும் ராமநாதபுரம் வேட்பாளரை அறிவித்த ஐயூஎம்எல்.. நவாஸ் கனி!
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் ராமநாதபுரத்தில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் ராமநாதபுரத்தில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் லோக்சபா தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடும் என்று தற்போது அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. திமுக போட்டியிடும் 20 தொகுதிகள், மற்ற கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியை திமுக அளித்து இருக்கிறது.
தற்போது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் இதுகுறித்து அறிவித்துள்ளார்.
அதன்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி போட்டியிடுகிறார். நவாஸ் கனி எஸ்.டி.கொரியர் நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.
இவர் ஏணி சின்னத்தில் போட்டியிட இருக்கிறார். இவர் கடந்த ஒரு மாதமாக அங்கு தேர்தல் பணிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக கூட்டணியில் முறையாக அறிவிக்கப்பட்ட முதல் வேட்பாளர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications