தமிழ்நாடு.. ஸ்டார் வேட்பாளர்களெல்லாம் நாளை வேட்பு மனு தாக்கல் செய்யப் போகிறார்கள்!
சென்னை: தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், நட்சத்திர வேட்பாளர்கள் நாளை தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்கிறார்கள்.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. இதில் ஆளும் அதிமுக மற்றும் எதிர்கட்சியான திமுக மற்றும் பல்வேறு கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை முக்கிய வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள்.

தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுதாக்கல் செய்கிறார். இதேபோல் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு தாக்கல் செய்கிறார்கள்.
தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நாளை வேட்புமனுதாக்கல் செய்ய உள்ளார்கள்.
தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிக்கு இதுவரை 254 பேர் மனு தாக்கல் செய்துள்ளார்கள். அதே போன்று 18 சட்டமன்ற தொகுதிக்கு 72 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்கள். சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தொடர்ந்து இன்று முதல் மீண்டும் இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. நாளை மறுநாள் வேட்புமனு பரிசீலனை தொடங்குகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications