போன தேர்தலில் கிடைத்த ரிசல்ட்தான் இப்பவும் கிடைக்கும்.. திமுக குறித்து மு.க.அழகிரி

முன்னாள் எம்.பி மு.க அழகிரி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

மதுரை : போன தேர்தலில் சந்தித்த அதே முடிவைத்தான் வரும் தேர்தலிலும் திமுக சந்திக்கும் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மாலை லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடுகிறார். இதனால் அண்ணா அறிவாலயம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.

Lok Sabha Elections 2019: M K Alagiri will hold press meet in few minutes in Chennai

இந்த நிலையில் இன்று மு.க. அழகிரி செய்தியாளர்களைப் பார்க்கப் போவதாக பரபரப்பு கிளம்பியது. இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் செய்திாயளர்கள் அவரை சந்தித்தபோது, திமுக வேட்பாளர்கள் குறித்து ஒரு வாரம் கழித்து செய்தியாளர்களை அழைத்துப் பேசுவேன். நானே கூப்பிடுகிறேன்.

திமுக வெற்றி வாய்ப்பு குறித்து ஏற்கனவே கூறி விட்டேன். கடந்த தேர்தல் முடிவுதான் இப்போதும் வரும் என்று கூறி கிளம்பிச் சென்று விட்டார் அழகிரி.

மதுரை சிபிஎம் வேட்பாளர் சு. வெங்கடேசன் உங்களைச் சந்திக்கப் போவதாக கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டபோது, சந்திக்க வந்தால் சந்திப்பேன். உரிய மரியாதை கொடுப்பேன் என்று கூறினார் அழகிரி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+