நீங்கதான் நிற்கணும்.. ஆ.ராசாவிற்கு மீண்டும் நீலகிரி.. அசத்தலாக களமிறக்கும் ஸ்டாலின்!

திமுக சார்பாக லோக்சபா தேர்தலில் நீலகிரி (தனி) தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா போட்டியிடுகிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    வெளியானது திமுகவின் வேட்பாளர் பட்டியல்

    சென்னை: திமுக சார்பாக லோக்சபா தேர்தலில் நீலகிரி (தனி) தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா போட்டியிடுகிறார்.

    லோக்சபா தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. 20 லோக்சபா தொகுதிகளில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இதில் நீலகிரி (தனி) தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா போட்டியிடுவது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஏன் முக்கியம்

    ஏன் முக்கியம்

    நீலகிரி தொகுதி தனித் தொகுதியாகும். இது பட்டியலின வேட்பாளர்களுக்கான தொகுதி. அதனால் இந்த தொகுதி அதிக முக்கியத்துவம் பெறுகிறது. திமுக போட்டியிடும் மூன்று தனி தொகுதிகளில் இதுவும் ஒரு தொகுதி ஆகும்.

    போட்டியிடுகிறார்

    போட்டியிடுகிறார்

    இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் திமுக சார்பாக நீலகிரி தொகுதியில் போட்டியிடுகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா. இதற்கான அறிவிப்பு இன்றுதான் வெளியானது. திமுகவின் ஸ்டார் வேட்பாளர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    எங்கு போட்டியிட்டார்

    எங்கு போட்டியிட்டார்

    ஆ.ராசா அதிகம் போட்டியிட்டது பெரம்பலூர் தொகுதியில்தான் ஆ.ராசா போட்டியிட்டு வந்தார். 1996-2004 தேர்தல் வரை 4 முறை அங்கு போட்டியிட்டார். அதில் 3 முறை வெற்றிபெற்றார். அதன்பின் நீலகிரிக்கு மாறினார்.

    வெற்றி வரலாறு

    வெற்றி வரலாறு

    2009ல் நீலகிரியில் போட்டியிட்டு வென்றார். அதன்பின்தான் மத்திய தொலைத்தொடர்புதுறை அமைச்சர் ஆனார். 2014ல் இதே தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர்கள் எஸ். கோபால கிருஷ்ணனிடம் தோல்வி அடைந்தார். ஆனால் தற்போது மீண்டும் அதே தொகுதியில் இவர் போட்டியிட முடிவெடுத்துள்ளார்.

    நல்ல மனநிலை

    நல்ல மனநிலை

    திமுகவில் தற்போது மிக முக்கிய உறுப்பினராக ஆ.ராசா மாறி உள்ளார். 2ஜி வழக்கில் வெற்றிபெற்ற பின் ஆ.ராசா இன்னும் துடிப்பான மனநிலையில் இருக்கிறார். இதனால் தேர்தலின் போதும் இவர் அதிக கவனம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+