இவர்கள்தான் மெயின் பிளேயர்ஸ்.. 4 பேருக்கு இடையில்தான் போட்டி.. தமிழகத்தின் அரசியல் சதுரங்கம்!
தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் இந்த முறை நான்கு முனை போட்டி நிலவி வருகிறது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் இந்த முறை நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. இதனால் இந்த தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை கணிப்பது மிகவும் சிரமமான காரியமாக மாறி இருக்கிறது.
லோக்சபா தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி துவங்குகிறது. 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடக்க உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது.
மிக முக்கியமாக ஏப்ரல் 18ம் தேதி 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்கிறது. இந்த தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவி வருகிறது.

அதிமுக கூட்டணி
யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழகத்தில் அதிமுக மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கி உள்ளது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாமக 7 இடங்கள், பாஜக 5 இடங்கள், தேமுதிக 4 இடங்கள், புதிய தமிழகம் 1 இடம், புதிய நீதிக்கட்சி கட்சி 1 இடம், என்.ஆர் காங்கிரஸ் 1 இடம், 21 இடங்களில் அதிமுக போட்டியிட உள்ளது. தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் மிகப்பெரிய கூட்டணி இதுதான்.

திமுக கூட்டணி
தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் திமுகவின் கூட்டணியில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதியில் திமுக கூட்டணியில் 10ல் காங்கிரஸ் கட்சி போட்டியிடும். விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா இரண்டு இடங்களில் போட்டியிடும். மதிமுக, ஐயூஎம்எல், ஐஜேகே, கொங்கு நாடு மக்கள் கட்சி தலா ஒரு இடங்களில் போட்டியிடும். ஆட்சிக்கு எதிரான அணிகள் எல்லாம் ஒன்று திரண்டு இருக்கிறது.

டிடிவி தினகரன் போட்டி
அதேபோல் லோக்சபா தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் டிடிவி தினகரன் மிக முக்கிய பங்கு வகிக்க போகிறார். இந்த லோக்சபா தேர்தலில் அதிமுக, திமுக போலவே களநிலவரம் தெரிந்த பெரிய கட்சி டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்தான். அமமுகவும் தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளது. இவர் முக்கிய மாநில கட்சிகளுக்கு டப் கொடுக்க உள்ளார்.

கமல்ஹாசன் போட்டி
இந்த தேர்தலில் ஆச்சர்ய புது வரவு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிதான். லோக் சபா தேர்தலில் தமிழகத்தில் யாருடனும் கூட்டணி வைக்காமல் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 40 தொகுதியிலும் மநீம வேட்பாளர்களை நிறுத்த இருக்கிறது. அதேபோல் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட உள்ளது.

ஆகவே என்ன
ஆகவே மக்களே தமிழகத்தில் இவர்கள் நான்கு பேருக்கும் இடையில்தான் லோக்சபா தேர்தலில் போட்டி நிலவ போகிறது. இதில் கமலும், தினகரனும் அதிமுக, திமுகவிற்கு தங்களை மாற்று என்று கூறுகிறார்கள். அதேபோல் அதிமுக பெரிய கூட்டணி அமைத்து காத்து இருக்கிறது. இவர்களுக்கு எதிராக நிலவும் காற்றை தன் பக்கம் திருப்ப நினைக்கிறது திமுக. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications