சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அட.. மாஸ் காட்டும் விசிக.. களமிறங்கிய திருமாவளவன், ரவிக்குமார்.. 2 தொகுதிகளில் போட்டி!

லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தது விசிக

    சென்னை: லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன், விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் போட்டியிட இருக்கிறார்கள்.

    லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் எந்த கட்சிகள் எங்கு போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மொத்தம் 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

    மீதமுள்ள 20 தொகுதிகளில் மற்ற கூட்டணி கட்சிகள் போட்டியிடுகிறது. இதில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் இன்னும் சற்றுநேரத்தில் அறிவிக்கப்பட உள்ளது.

    தலித்துகளின் மனதை மொத்தமாக அள்ளிய அதிமுக.. 5 தனி தொகுதிகளில் போட்டி.. திமுகவுக்கு நெருக்கடி! தலித்துகளின் மனதை மொத்தமாக அள்ளிய அதிமுக.. 5 தனி தொகுதிகளில் போட்டி.. திமுகவுக்கு நெருக்கடி!

    விசிக அறிவிப்பு

    விசிக அறிவிப்பு

    லோக்சபா தேர்தலில் விசிக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் திமுக கூட்டணியில் விசிக இரண்டு இடங்களில் போட்டியிடுகிறது விசிக போட்டியிடும் தொகுதிகள்: சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி) ஆகும்.

    தொல். திருமாவளவன் போட்டி

    தொல். திருமாவளவன் போட்டி

    இதில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிட உள்ளார். தொல். திருமாவளவன் தனிச்சின்னத்தில் போட்டியிட உள்ளார். இவருக்கு எதிராக விழுப்புரத்தில் அதிமுக போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    விழுப்புரம் தொகுதி

    விழுப்புரம் தொகுதி

    விழுப்புரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் ரவிக்குமார் போட்டியிட உள்ளார். ஆனால் இங்கு விசிக தனிச்சின்னத்தில் போட்டியிடாது. ரவிக்குமார் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளார்.

    பாமகவை எதிர்கிறார்

    பாமகவை எதிர்கிறார்

    விழுப்புரம் தொகுதியில் பாமக கட்சி போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக போட்டியிடும் 7 தொகுதிகளில் இதுவும் ஒன்றும். இதனால் விழுப்புரத்தில் கடுமையான போட்டி நிலவ உள்ளது.

    English summary
    Lok Sabha Elections 2019: Viduthalai Chiruthaigal Katchi announces Thol.Thirumavalavan and Ravikumar as their candidate in DMK alliance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X