பாஜகவுடன் பேசுகிறோம்.. விஜயகாந்த் வந்ததும் அறிவிப்பார்.. தேமுதிக கூட்டணி பற்றி சுதீஷ் பேட்டி!
லோக்சபா தேர்தலுக்காக பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருவது உண்மைதான் என்று தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேட்டியளித்துள்ளார்.
சென்னை: லோக்சபா தேர்தலுக்காக பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருவது உண்மைதான் என்று தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேட்டியளித்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இந்த முறை நான்குமுனை போட்டி நடைபெற வாய்ப்புள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே முடிவாகிவிட்டது.

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகியவை தனித்தனியாக போட்டியிட இருக்கிறது. இந்த நிலையில் பாஜக - அதிமுக - தேமுதிக இந்த தேர்தலுக்காக கூட்டணி வைக்கும் என்று கூறுகிறார்கள்.
ஏற்கனவே இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தற்போது இதுகுறித்து தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேட்டியளித்துள்ளார்.
அதில், லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு பேச்சுவார்த்தை நடக்கும். அதன்பின் கூட்டணி குறித்து அறிவிப்போம்
நாங்கள் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருவது உண்மைதான். விரைவில் இந்த கூட்டணி குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்படும்.
இன்னும் 2 வாரங்களில் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்புவார். அவர்தான் கூட்டணி குறித்து அறிவிப்பார். அவர் வந்த பின் இறுதி முடிவு எடுக்கப்படும்.
இந்த மாத இறுதிக்குள் கூட்டணி குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும். இன்னும் சில மாநில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தேர்தலுக்காக தேமுதிகவில் பொறுப்பாளர்களை நியமித்து வேகமாக பணியாற்றி வருகிறோம். தொண்டர்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள், என்று எல்.கே.சுதீஷ் பேட்டியளித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications