Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூபாலா பற்ற வைத்த குஜராத் 'தீ' ? வீதியில் திரண்ட 30,000 ராஜ்புத் பெண்கள்! 4 தொகுதிகளில் பாஜக காலி!

Subscribe to Oneindia Tamil

இந்த 2024 மக்களவைத் தேர்தல் களத்தில் பலரது கவனமும் குஜராத் மீது விழுந்துள்ளது. அதற்குக் காரணம், கடந்த மாநில அரசியலில் கடந்த 34 ஆண்டுகளாக பாஜகவின் ஆட்சிதான் இங்கே நடந்து வருகிறது.

'குஜராத் மாடல்' என்ற முழக்கத்தை முன்வைத்துத்தான் இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக 2014இல் முன்மொழியப்பட்டார். அந்த மாநிலம் அளித்த வெளிச்சம்தான் மோடியை இந்தியா முழுவதும் அறிய வைத்தது.

Lok Sabha Elections 2024 Parshottam Rupala Comments against Rajput community

அடுத்து அம்மாநிலத்தில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், வன்முறை, கலகம் எல்லாம் உலக அளவில் தலைப்புச் செய்தியாக மாறியது. மாநில முதல்வர் முகமாக இருந்த மோடியை, ஆர்.எஸ்.எஸ். நாட்டின் பிரதமர் முகமாக வளர்த்து கொண்டுவந்தது.

ஆக, எப்படிப் பார்த்தாலும் குஜராத் பாஜகவின் கோட்டை. அங்குள்ள காந்தி நகர் மக்களவைத் தொகுதிக்கு ஒரு வரலாறு உண்டு. இங்குதான் எல்.கே. அத்வானி போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

1998 தொடங்கி 5 முறை அத்வானி இத்தொகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதன்பின்னர் 2019இல் அது அமித்ஷா கோட்டையாக மாறியது.

மாநிலத் தேர்தலில் மூன்று இலக்க வெற்றியைப் பதியவைத்து வந்த பாஜக 2017இல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் லேசாகச் சரிவைக் கண்டது. அந்தத் தேர்தலில் வெறும் 99 சட்டமன்ற உறுப்பினர்கள் பெற்று ஆட்சியை அமைத்தது.

Lok Sabha Elections 2024 Parshottam Rupala Comments against Rajput community

அதன்பின்னர் நடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்தான் வரும் என்று பலரும் ஆருடம் சொன்னார்கள். ஆனால், மீண்டும் எழுச்சி பெற்று பாஜக 26 ஹாட்ரிக் அடித்தது பாஜக.

இப்படிப் பலகட்ட எதிர்பார்ப்புகள் நிறைந்த குஜராத் பாஜக கோட்டையில் லேசாக ஓட்டை விழும் என்கிறார்கள். அதற்குக் காரணம் ராஜ்புத் மற்றும் க்ஷத்ரிய சமூகத்தின் கொந்தளிப்புதான்.

மாநிலத்தில் மொத்த மக்கள் தொகையில் க்ஷத்ரிய வகுப்பினர் 8% உள்ளனர். அவர்களைப் பகைத்துக் கொண்டுள்ளார் பாஜக ராஜ்கோட் தொகுதி வேட்பாளர் பர்ஷோத்தம் ரூபாலா. மோடிக்கு மிக நெருக்கமானவர். மத்திய அரசில் இவர் இந்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு பால்வளத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

தேர்தல் பிரச்சார மேடையில் பேசிய ரூபாலா, "ராஜ்புத் ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்களை எதிர்க்கவில்லை. அவர்களுடன் ஒத்துழைத்தார்கள்" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
அத்துடன் நிற்காமல் "தங்கள் பெண்களை ஆங்கிலேயர்களுடன் திருமணம் செய்து கொள்வதில் அவர்கள் தயக்கம் காட்டவில்லை" என்று விமர்சித்திருந்தார்.

ரூபாலாவின் இந்த கருத்து உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மூன்று மாநிலங்களில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

Lok Sabha Elections 2024 Parshottam Rupala Comments against Rajput community

ராஜ்கோட்டிலிருந்து அவரது வேட்புமனுவைத் திரும்பப் பெறுமாறு ராஜ்புத் சமூகத்தினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அது நடக்கவில்லை. காரணம், இவர் பாஜகவின் ஹெவிவெயிட் கேண்டிடேட். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தும் அவர் திரும்பப்பெறாததால் சௌராஷ்டிரா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

மே 1 ஆம் தேதி 30,000க்கும் மேற்பட்ட ராஜபுத்திரர்கள் ஒன்று கூடியிருந்த லிம்ப்டி சட்டமன்றத் தொகுதியில் போராட்டம் நடத்தினர்.

இதனால் பாஜக போட்டியிடும் 4 தொகுதிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது
காந்திநகர், ராஜ்கோட், ஜாம் நகர், அம்ரேலி ஆகிய தொகுதிகளில் உள்ள க்ஷத்ரிய சமூகத்தினர் கொந்தளித்துப் போய் உள்ளனர்.

இதில் காந்தி நகரில் தமிழர்கள் கணிசமாக உள்ளனர். மற்றும் கடவா பட்டேல் சமூகம் ஆதிக்கம் அதிகம். முஸ்லிம்கள் கணிசமாக உள்ளனர். இவர்கள் அனைவரும் பாஜகவுக்கு எதிராகத் திரும்பி உள்ளனர்.

ஜாம்நகர் தொகுதியில் உள்ள பட்டேல், அகிர் மக்களும் க்ஷத்ரிய சமூகமும் பாஜகவுக்கு எதிராக மாறியுள்ளது.

இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் ராஜ்கோட்டில் உள்ள ராஜ்புத் சமூகத்தின் தலைவரான டாக்டர் மகேஷ் ராஜ்புத் கூறுகையில், "ரூபாலாவின் பேச்சால் எங்கள் பெண்கள் மிகவும் கோபமடைந்துள்ளனர். அவர்கள் ஜவுஹர் (தீக்குளிப்பு) செய்யவும் தயாராக இருந்தனர்.
தேசத்துக்காகப் பல தியாகங்களைச் செய்த ஒரு சமூகத்தை ஆங்கிலேயர்களுடன் கூட்டு வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டி உள்ளனர்" என்று வேதனை தெரிவித்துள்ளார்

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்புத் இளைஞர் தலைவர் அபிஷேக் சோம், "அரசியல் ரீதியாக எங்களை ஓரங்கட்ட பாஜக அரசு விரும்புகிறது. நாங்கள் எங்கள் வாக்குகளை (அசாதுதீன்) ஒவைசிக்குக் கொடுப்போம்,

ஆனால் பாஜகவுக்குப் போடமாட்டோம். சுதந்திரத்திற்குப் பிறகு, நாங்கள் எங்கள் சமஸ்தானங்களை இழந்தோம். இப்போது அவர்கள் எங்கள் அதிகாரத்தைப் பறிக்க விரும்புகிறார்கள். நாங்கள் அவர்களை விட்டுவிட மாட்டோம்.

காங்கிரஸ் அல்லது சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டோம் என்று கருதி பாஜக எங்களைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டது.

சஹாரன்பூர் மகா பஞ்சாயத்தில், காவி கட்சிக்குத் திரும்பமாட்டோம் என்று கூட்டு வாக்குறுதி அளித்துள்ளோம்" என்று கொந்தளித்துப் போய் பேசி உள்ளார்.

ஆக, பர்ஷோத்தம் ரூபாலா பற்ற வைத்த தீ இப்போது குஜராத்தைத் தாண்டி ராஜஸ்தான், உபி வரை பற்றி எரியத் தொடங்கி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+