லோக்சபா தேர்தல் 2024.. "மீண்டும்" 38 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி.. அதிமுக 1 தானாம்.. பரபர கணிப்பு
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் 38 இடங்களை திமுக காங்கிரசின் இந்திய கூட்டணி வெல்லும் என்றும், அதிமுக - பாஜக கூட்டணி ஒரே ஒரு இடத்தில் வெல்லும் என்றும் கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் அடுத்தடுத்து வெளியாக தொடங்கி உள்ளன. அதன்படி 2024 நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. பாஜக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

PCSurveysIndia அதாவது Political Critic என்ற அமைப்பு இந்த கருத்து கணிப்பை வெளியிட்டு உள்ளது.
அதன்படி
- பாஜகவின் என்டிஏ கூட்டணி : 255 இடங்கள்
- எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி: 225 இடங்கள்
- மற்ற கட்சிகள் : 63 இடங்கள்
வெல்லும் என்று இந்த அமைப்பு கணிப்பு வெளியிட்டு உள்ளது
மாநில வாரியாக: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் 38 இடங்களை திமுக காங்கிரசின் இந்திய கூட்டணி வெல்லும் என்றும், அதிமுக - பாஜக கூட்டணி ஒரே ஒரு இடத்தில் வெல்லும் என்றும் இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. அதன்படி
- அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் - பாஜக கூட்டணி 0, இந்தியா கூட்டணி 1, மற்றவை 0
- ஆந்திரப் பிரதேசம் - பாஜக கூட்டணி 0, இந்தியா கூட்டணி 1, மற்றவை 25
- அருணாச்சல பிரதேசம் - பாஜக கூட்டணி 2, இந்தியா கூட்டணி 1, மற்றவை 0
- அஸ்ஸாம் - பாஜக கூட்டணி 9, இந்தியா கூட்டணி 3, மற்றவை 2
- பீகார் - பாஜக கூட்டணி 22, இந்தியா கூட்டணி 18, மற்றவை 0
- சண்டிகர் - பாஜக கூட்டணி 1, இந்தியா கூட்டணி 0, மற்றவை 0
- சத்தீஸ்கர் - பாஜக கூட்டணி 5, இந்தியா கூட்டணி 6, மற்றவை 0
- தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி - பாஜக கூட்டணி 0, இந்தியா கூட்டணி 1, மற்றவை 0
- டாமன் மற்றும் டியு - பாஜக கூட்டணி 1, இந்தியா கூட்டணி 0, மற்றவை 0
- டெல்லி - பாஜக கூட்டணி 3, இந்தியா கூட்டணி 4, மற்றவை 0
- கோவா - பாஜக கூட்டணி 0, இந்தியா கூட்டணி 2, மற்றவை 0
- குஜராத் - பாஜக கூட்டணி 26, இந்தியா கூட்டணி 0, மற்றவை 0
- ஹரியானா - பாஜக கூட்டணி 8, இந்தியா கூட்டணி 2, மற்றவை 0
- ஹிமாச்சல் பிரதேசம் - பாஜக கூட்டணி 1, இந்தியா கூட்டணி 3, மற்றவை 0
- ஜம்மு & காஷ்மீர் லடாக் - பாஜக கூட்டணி 2, இந்தியா கூட்டணி 2, மற்றவை 2
- ஜார்கண்ட் - பாஜக கூட்டணி 8, இந்தியா கூட்டணி 4, மற்றவை 2
- கர்நாடகா - பாஜக கூட்டணி 12, இந்தியா கூட்டணி 14, மற்றவை 2
- கேரளா - பாஜக கூட்டணி 0, இந்தியா கூட்டணி 20, மற்றவை 0
- லட்சத்தீவு - பாஜக கூட்டணி 0, இந்தியா கூட்டணி 1, மற்றவை 0
- மத்தியப் பிரதேசம் - பாஜக கூட்டணி 17 , இந்தியா கூட்டணி 12, மற்றவை 0
- மகாராஷ்டிரா - பாஜக கூட்டணி 23, இந்தியா கூட்டணி 24, மற்றவை 1
- மணிப்பூர் - பாஜக கூட்டணி 0, இந்தியா கூட்டணி 2, மற்றவை 0
- மேகாலயா - பாஜக கூட்டணி 0, இந்தியா கூட்டணி 1, மற்றவை 1
- மிசோரம் - பாஜக கூட்டணி 0, இந்தியா கூட்டணி 0, மற்றவை 1
- நாகலாந்து - பாஜக கூட்டணி 0, இந்தியா கூட்டணி 0, மற்றவை 1
- ஒரிசா - பாஜக கூட்டணி 5, இந்தியா கூட்டணி 1, மற்றவை 15
- பாண்டிச்சேரி - பாஜக கூட்டணி 0, இந்தியா கூட்டணி 1, மற்றவை 0
- பஞ்சாப் - பாஜக கூட்டணி 0, இந்தியா கூட்டணி 13, மற்றவை 0
- ராஜஸ்தான் - பாஜக கூட்டணி 15, இந்தியா கூட்டணி 10, மற்றவை 0
- சிக்கிம் - பாஜக கூட்டணி 0, இந்தியா கூட்டணி 1, மற்றவை 0

- தமிழ்நாடு - பாஜக கூட்டணி 1, இந்தியா கூட்டணி 39, மற்றவை 0
- தெலுங்கானா - பாஜக கூட்டணி 3, இந்தியா கூட்டணி 4, மற்றவை 10
- திரிபுரா - பாஜக கூட்டணி 1, இந்தியா கூட்டணி 1, மற்றவை 0
- உத்தர பிரதேசம் - பாஜக கூட்டணி 69, இந்தியா கூட்டணி 10, மற்றவை 1
- உத்தரகாண்ட் - பாஜக கூட்டணி 4, இந்தியா கூட்டணி 1, மற்றவை 0
- மேற்கு வங்கம் - பாஜக கூட்டணி 17, இந்தியா கூட்டணி 25, மற்றவை 0
என்று இந்த கருத்து கணிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகளை துல்லியமாக கணித்தது இந்த அமைப்புதான்.
- கடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில்
- காங்கிரஸ் : 135 - 145
- பாஜக: 65 - 70
- மஜத: 10 - 15
- மற்றவர்கள்: 5- 10
என்று இந்த அமைப்பு கணிப்பு வெளியிட்டு இருந்தது.
அதன்படியே காங்கிரஸ் 136 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது. அதேபோல் தற்போது லோக்சபா தேர்தலுக்கான கருத்து கணிப்பை இந்த அமைப்பு வெளியிட்டு உள்ளது. நாடாளுமன்றத்தில் மொத்தம் 543 இடங்கள் உள்ளன. இதில் மெஜாரிட்டி பெற 272 இடங்கள் தேவை. இதனால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்று கூறப்பட்டு உள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications