திமுகவிற்கு எதிராக நேரடியாக களமிறங்கும் சுதீஷ்.. 4 தொகுதிகளில் தேமுதிக யாரை எதிர்க்கிறது தெரியுமா?

தேமுதிக லோக்சபா தேர்தலில் போட்டியிடும் நான்கு தொகுதிகள் என்னெவென்று பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    திமுக கூட்டணி Vs அதிமுக கூட்டணி.. எங்கெங்கு நேரடி போட்டி

    சென்னை: தேமுதிக லோக்சபா தேர்தலில் போட்டியிடும் நான்கு தொகுதிகள் என்னெவென்று பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்காக கட்சிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வருகிறது.

    அதிமுக கூட்டணியில் தேமுதிக நான்கு இடங்களை பெற்று உள்ளது. லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று காலை சென்னையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    எத்தனை இடங்கள்

    எத்தனை இடங்கள்

    லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக மொத்தம் நான்கு இடங்களில் போட்டியிடுகிறது. இதில் கள்ளக்குறிச்சி, திருச்சி, வட சென்னை, விருதுநகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான அறிவிப்பு இன்றுதான் வெளியிடப்பட்டது.

    யாரை சந்திக்கிறது

    யாரை சந்திக்கிறது

    இதில் திருச்சி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அங்கு தேமுதிக காங்கிரஸ் கட்சியை எதிர்கொள்கிறது. அதேபோல் விருதுநகர் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இங்கும் தேமுதிக காங்கிரஸ் கட்சியை எதிர்கொள்கிறது.

    மீதம் திமுக

    மீதம் திமுக

    மீதமுள்ள இரண்டு இடங்களில் திமுகவை தேமுதிக எதிர்கொள்கிறது. கள்ளக்குறிச்சி , வட சென்னை ஆகிய தொகுதிகளில் தேமுதிக திமுக கட்சியை எதிர்கொள்கிறது. இதனால் காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளை 2 தொகுதிகளில் தேமுதிக எதிர்கொள்ள உள்ளது.

    போட்டியிட வாய்ப்பு

    போட்டியிட வாய்ப்பு

    இதில் கவனிக்க வேண்டிய விஷயமா என்னவென்றால், கள்ளக்குறிச்சி தொகுதியில் பெரும்பாலும் தேமுதிக சார்பாக அதன் துணை பொதுச்செயலாளர் சுதீஷ் போட்டியிட இருக்கிறார். இதனால் சுதீஷுக்கு எதிராக திமுக யாரை வேட்பாளராக நிறுத்த போகிறது என்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பலமான இரண்டு இடங்கள்

    பலமான இரண்டு இடங்கள்

    தேமுதிக பலமாக இருக்கும் இரண்டு இடங்கள் என்றால் அது கள்ளக்குறிச்சி மற்றும் விருதுநகர். அதில் கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுகவையும், விருதுநகர் தொகுதியில் காங்கிரசையும் தேமுதிக எதிர்கொள்ள உள்ளது. இங்கு தேமுதிக என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+