இன்று வெளியாகிறது திமுக வேட்பாளர் பட்டியல்? உதயநிதி விரும்பியது நடக்குமா.. ஸ்டாலின் முடிவு என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது. இதனைத்தொடர்ந்து திமுகவின் வேட்பாளர் பட்டியலும் இன்றே வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், உதயநிதி ஸ்டாலின் விரும்பியது போலவே இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது. நாளை மறுநாள் முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. இதனால் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றன.

Lok Sabha elections DMK candidate list likely to be released today

இன்று வேட்பாளர் பட்டியல்: அந்த வகையில் தமிழகத்தில் திமுக படுவேகமாக உள்ளது. ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை உறுதி செய்துவிட்ட நிலையில், தற்போது கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி மற்றும் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என்பதையும் இறுதி செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தான் இன்று திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாவதாக கூறப்படுகிறது.

மூத்தவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என பலருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும், அனைவரையும் உள்ளடக்கியதாக திமுகவின் வேட்பாளர் பட்டியல் இருக்கும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதேபோல், ஏற்கனவே இருக்கும் எம்பிக்களில் சிலரின் வாய்ப்புகள் பறிக்கப்படலாம் என்றும் தெரிகிறது. சரியாக பணி செய்யாத, மக்கள் மத்தியில் அபிப்ராயம் இழந்த சிலருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்று பேசப்படுகிறது.

யாருக்கெல்லாம் வாய்ப்பு: தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், வரும் தேர்தலில் இளைஞரணியினருக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டும் என சேலம் மாநாட்டில் வெளிப்படையாக கோரிக்கை வைத்து இருந்தார். எனவே, லோக்சபா தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனினும், உதயநிதியின் இந்த கோரிக்கை தொடர்பாக பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த முதல்வர் ஸ்டாலின், மூத்தவர்கள், இளையவர்கள், பெண்கள் ஆகிய அனைவரையும் உள்ளடக்கியே வேட்பாளர் பட்டியல் இருக்கும் என்று கூறியிருந்தார். எனவே, திமுக வேட்பாளர் பட்டியலில் யார் யார் பெயர் இடம் பெறும் என்பது குறித்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

எப்படி ஆகினும், 12 முதல் 13 இடங்களை ஏற்கனவே எம்பியாக இருக்கும் சீனியர்களுக்கு கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என்றும், 6 முதல் 8 தொகுதிகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. திமுகவில் யார் யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்க போகிறது என்பதற்கு இன்று விடை தெரிந்துவிடும்.

திமுக கூட்டணி கட்சிகள்: தமிழகத்தில் 21 லோக்சபா தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி புதுவை உள்பட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. விசகவுக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தை திமுக கட்சி ஒதுக்கியுள்ளது. இதேபொல் சிபிஐக்கு 2 தொகுதிகளும், சிபிஎம் கட்சிக்கு 2 தொகுதிகளும், மதிமுகவிற்கு ஒரு தொகுதியும், இயூமுலீக்குக்கு ராமநாதபுரம் தொகுதியையும், கொமதேக நாமக்கல் தொகுதியையும் ஒதுக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+