அதிமுகவை வீழ்த்திய ஸ்டாலின்.. தேசியஅளவில் முக்கிய கட்சியாக உருவெடுக்கும் திமுக
லோக்சபா தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெறுவதன் மூலம் இந்தியாவில் நான்காவது மிகப்பெரிய கட்சியாக திமுக உருவெடுக்க உள்ளது.
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெறுவதன் மூலம் இந்தியாவில் நான்காவது மிகப்பெரிய கட்சியாக திமுக உருவெடுக்க உள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. காங்கிரஸ் கட்சி நினைத்து பார்க்க முடியாத தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
காங்கிரஸ் மட்டுமில்லாமல் காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த கட்சிகளும் மோசமாக தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

எத்தனை இடங்கள்
இதுவரை வெளியான நிலவரங்களின்படி காங்கிரஸ் கூட்டணி 91 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணி 342 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மற்ற மாநில கட்சிகள் 110 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

கூட்டணி கட்சிகள் இல்லை
இதில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சிகள் பெரிதாக எங்குமே வெற்றிபெறவில்லை. அதேபோல் மாநில கட்சிகளும் எங்கும் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி 25 இடங்களை கூட சேர்ந்து தாண்டவில்லை.

திமுக மட்டுமே
இதனால் லோக்சபா தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெறுவதன் மூலம் இந்தியாவில் மூன்றாவது அல்லது நான்காவது மிகப்பெரிய கட்சியாக திமுக உருவெடுக்க உள்ளது. தற்போது திமுக 20 இடங்களில் 19 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால் காங்கிரசுக்கு அடுத்து திமுக பெரிய கட்சியாக உருவெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிறப்பு
அதே போல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மேற்கு வங்கத்தில் 19 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால் திமுக , திரிணாமுல் இடையே பெரிய கட்சிக்கான போட்டி நிலவி வருகிறது. ஆனால் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் மேலும் பின்னடைவை சந்திக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications