முக்கிய நபர்களுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. தேர்தல் முடிவை தொடர்ந்து ஆலோசனை.. என்ன திட்டம்?
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் முக்கிய சில நபர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் முக்கிய சில நபர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு பாஜகவிற்கு சாதகமாக வந்துள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதனால் மாநில கட்சிகள், 21 எதிர்க்கட்சிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளது. தமிழக அரசியலிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கிறது.

தமிழகம் எப்படி
தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி மோசமான தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அதிமுக கூட்டணி மொத்தமாக 2 இடங்களில் மட்டுமே வெல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக 9 இடங்கள் வரை வெல்லும் நிலை நிலவி வருகிறது.

ரஜினி ஆலோசனை
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் முக்கிய நபர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். முதலில் சிலருடன் போன் செய்து ஆலோசனை செய்த ரஜினி, 2 மணி நேரம் வரை முக்கிய விஷயங்களை பேசியதாக கூறப்படுகிறது. அதேபோல் சிலரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்தும் ரஜினி பேசி இருக்கிறார்.

என்ன ஆலோசனை
ஏற்கனவே ரஜினி லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின் முக்கிய முடிவுகளை எடுப்பார் என்று தகவல்கள் வந்தது. லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவான முடிவுகள் வந்தால் ரஜினி அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வந்தது. தற்போது அதேபோல் பாஜக பெரும்பான்மை பெற்றவுடன் ரஜினி தனது பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளார்.

எப்போது வருவார்
ரஜினி கிட்டத்தட்ட பல வருடங்களாக, அரசியலுக்கு வருவேன் வருவேன் என்று கூறி ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் முதல்முறை தேர்தல் முடிவுகளுக்கு பின் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்கு பின்பாவது அவர் ஏதாவது முக்கிய முடிவு எடுப்பாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications