என்ன ஒரு குஷி.. மாம்பழங்களை பிழிந்து என்ஜாய்.. அறிவாலயத்தில் பாமக தோல்வியை கொண்டாடிய திமுகவினர்!
லோக்சபா தேர்தலில் பாமக தோல்வி அடைந்ததை திமுக அலுவலகத்தில் திமுக தொண்டர்கள் வித்தியாசமாக கொண்டாடி இருக்கிறார்கள்.
சென்னை: லோக்சபா தேர்தலில் பாமக தோல்வி அடைந்ததை திமுக அலுவலகத்தில் திமுக தொண்டர்கள் வித்தியாசமாக கொண்டாடி இருக்கிறார்கள்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் திமுக அசாத்திய சாதனை நிகழ்த்தி இருக்கிறது. மொத்தம் 38 இடங்களில் 37 தொகுதியில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
அதே சமயம் தேசிய அளவில் பாஜக கூட்டணி பெரிய அளவில் வெற்றியை ருசித்து இருக்கிறது. பாஜக கூட்டணி மொத்தம் 360 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

திமுக வெற்றி
லோக்சபா தேர்தலில் திமுகவின் வெற்றியை இன்று முழுக்க திமுக தொண்டர்கள் கொண்டாடி தீர்த்தனர். முக்கியமாக சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பலர் மொத்தமாக கூடினார்கள். அங்கு வந்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பட்டாசு வெடித்தனர்.

பாமக தோல்வி
இந்த லோக்சபா தேர்தலில் பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளில் அனைத்திலும் படுதோல்வி அடைந்துள்ளது. முக்கியமாக பாமகவின் முக்கிய வேட்பாளரான அன்புமணி தேர்தலில் தோல்வி அடைந்து இருக்கிறார். திமுக வேட்பாளர் செந்தில்குமார் அங்கு வெற்றியை அறுவடை செய்து வருகிறார்.

திமுகவினர் கொண்டாட்டம்
அன்புமணியின் தோல்வியை திமுக பெரிய அளவில் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக சென்னை அண்ணா அறிவாலயத்திலேயே திமுகவினர் கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாம்பழம், மாம்பழம் என்று திமுகவினர் கோஷமிட்டு பாமகவை கிண்டல் செய்தனர்.
|
ஜூஸ்
முத்தாய்ப்பாக, திமுகவினர் எல்லோரும் சேர்த்து அண்ணா அறிவாலயம் வெளியே மாம்பழங்களை நசுக்கி கொண்டாடினார்கள். மாம்பழங்களை தரையில் போட்டு மிதித்து, கையால் கசக்கி, ஒருவர் மீது ஒருவர் வீசி கொண்டாடினார்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications