தமிழகத்தில் திமுக கூட்டணிக்கே வெற்றி.. அதிமுக 2ம் இடம்.. நியூஸ் 18 தமிழ்நாடு கருத்து கணிப்பு!
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் திமுகவுக்கு வெற்றி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் திமுகவுக்கு வெற்றி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து 22 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 38 லோக்சபா தொகுதிகளுக்கு தமிழகத்தில் தேர்தல் நடந்தது.
கடந்த ஏப்ரல் 11ம் தேதி லோக்சபா தேர்தல் தொடங்கியது. அதன்பின் வரிசையாக 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்துள்ளதால் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளது.

வெற்றி யாருக்கு
இந்த நிலையில் தமிழக தேர்தல் முடிவுகள் நிலவரம் குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தில் திமுகவுக்கு வெற்றி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக பெரிய கட்சியாக உருவெடுக்கும்.

திமுக எப்படி
திமுக கூட்டணிக்கு 38 இடங்களில் மொத்தம் 22 முதல் 24 இடங்கள் வரை கிடைக்கும்.அதில், தி.மு.க 12-14 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3-5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிகிறது. காங்கிரஸ் 10ல் 7 இடங்கள் வரை தோற்க வாய்ப்புள்ளது.

அதிமுக எப்படி
அதிமுகவின் மெகா கூட்டணிக்கு 14 முதல் 16 இடங்கள் வரை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க 8-10 தொகுதிகளிலும், பா.ஜ.க 1-2 தொகுதிகளிலும், பா.ம.க 2-4 தொகுதிகளிலும், தே.மு.தி.க 1-2 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பில் தெரியவருகிறது.

கிடையாது
மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் திமுக பெரிய கட்சியாக மீண்டும் கம்பேக் கொடுக்க போகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications