திமுக கூட்டணிக்கு 21.. அமமுகவிற்கு 5.. அதிமுகவிற்கு 12.. நியூஸ் எக்ஸ் சர்வேயில் ஷாக்!
நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பின்படி தமிழகத்தில் திமுக கூட்டணி 21 இடங்களைக் கைப்பற்றும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
Recommended Video
சென்னை: நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பின்படி தமிழகத்தில் திமுக கூட்டணி 21 இடங்களைக் கைப்பற்றும் என்று கூறப்பட்டு இருக்கிறது. மாவட்ட வாரியான கணிப்புகள் வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 38 இடங்களில் தேர்தல் நடைபெற்றது. வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடைபெறவில்லை.
லோக்சபா தேர்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது. 7 கட்டமாக தேர்தல் நடந்து, இன்று மாலையோடு வாக்குப்பதிவு முடிந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நியூஸ் எக்ஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.

அதிமுக வெற்றி பெறும் இடங்கள்
அதன்படி அதிமுக கூட்டணி 12 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது. அதிமுக நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், ஆரணி, தேனி, திருவள்ளூர், திருப்பூர், கரூர் இடங்களை வெல்லும்.

பாமக வெற்றி
பாமக தர்மபுரியில் வெல்லும். பாஜக ராமநாதபுரத்தில் வெல்லும். தேமுதிக கள்ளக்குறிச்சியில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.

அமமுக ஐந்து இடங்கள்
அமமுக ஐந்து இடங்களில் வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. விருதுநகர், கோவை, மதுரை, பொள்ளாச்சி, திருச்சிராப்பள்ளியில் அமமுக வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

திமுக வெற்றி
திமுக கூட்டணி 21 இடங்களைக் கைப்பற்றும். அரக்கோணம், மத்திய சென்னை, வடசென்னை, தென்சென்னை, கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, சேலம், ஸ்ரீபெரும்புதூர், தென்காசி, தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை இடங்களை வெல்லும்.

காங்கிரஸ் வெற்றி
கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சிவகங்கையில் காங்கிரஸ் வெற்றி பெறும். விழுப்புரம், சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் வெற்றி பெறும். ஈரோட்டில் மதிமுக வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications