தமிழகத்தில் திமுக விஸ்வரூபம்.. 38 இடங்களை வெல்லலாம்.. இந்தியா டுடே - ஆக்சிஸ் எக்ஸிட் போல்!
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் திமுக அணி 34-38 இடங்களைக் கைப்பற்றும் என இந்தியா டுடே - ஆக்சிஸ் போல் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் திமுக அணி 34-38 இடங்களைக் கைப்பற்றும் என இந்தியா டுடே - ஆக்சிஸ் போல் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது. 7 கட்டமாக தேர்தல் நடந்து, இன்று மாலையோடு வாக்குப்பதிவு முடிந்துள்ளது.

தேர்தல் முடிந்ததை அடுத்து வரிசையாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகிறது. நாடு முழுக்க பாஜக கூட்டணி அதிக இடங்களை வெல்லும் என்று கருத்து கணிப்புகள் கூறுகிறது.
தமிழகத்தில் மொத்தம் 38 இடங்களில் தேர்தல் நடைபெற்றது. தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து இந்தியா டுடே -ஆக்சிஸ் போல் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
இந்திய டுடே - ஆக்சிஸ் போல் கருத்து கணிப்பில் திமுக அணி 34 முதல் 38 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.
அதிமுக கூட்டணி 0-4 இடங்களை பெறும் என்று கணித்து இருக்கிறது. மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சிக்கு எந்த இடமும் கிடைக்காது என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
