எச்.ராஜாவா இல்லை கார்த்தியா?.. சிவகங்கையில் யாருக்கு வெற்றி?.. நியூஸ் எக்ஸ் ஷாக் சர்வே!

லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பு வெளியிட்டு இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பு வெளியிட்டு இருக்கிறது.

லோக்சபா தேர்தல் நேற்று நடந்து முடிந்துள்ளது. 7 கட்டமாக தேர்தல் நடந்து, நேற்று மாலையோடு வாக்குப்பதிவு முடிந்துள்ளது.

லோக்சபா தேர்தல் தமிழகத்தில் மொத்தம் 38 இடங்களில் தேர்தல் நடைபெற்றது. வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடைபெறவில்லை.

முடிவுகள் வெளியாகி உள்ளது

முடிவுகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் தமிழகத்தில் நியூஸ் எக்ஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பின்படி தமிழகத்தில் திமுக கூட்டணி 21 இடங்களைக் கைப்பற்றும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

காங்கிரஸ் எத்தனை இடங்கள்

காங்கிரஸ் எத்தனை இடங்கள்

இந்த தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டது. காங்கிரஸ் மொத்தம் 10 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 7 இடங்களில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்று நியூஸ் எக்ஸ் கணித்துள்ளது.

எங்கு எல்லாம்

எங்கு எல்லாம்

அதன்படி கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சிவகங்கையில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கூறி உள்ளார்கள். இதில் சிவகங்கையில் பாஜக சார்பாக எச்.ராஜா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பாக ப. சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எச். ராஜா தோல்வி

எச். ராஜா தோல்வி

அதன்படி எச்.ராஜா இந்த தேர்தலில் படுதோல்வி அடைவார் என்று நியூஸ் எக்ஸ் கணித்துள்ளது. மேலும் கார்த்தி சிதம்பரம் சென்ற தேர்தலில் தோல்வி அடைந்த சிவகங்கையில் இந்தமுறை வெற்றிபெற போகிறார் என்றும் கணித்து இருக்கிறார்கள். இது எச்.ராஜா ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+