லேசாக சறுக்குதே.. கடந்த முறையை விட இந்த முறை பாஜகவிற்கு குறைவான இடங்கள்.. எக்சிட் போல் சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் பாஜகதான் மீண்டும் ஆட்சி அமைக்கும், ஆனால் 2019ல் பெற்றாடை விட குறைவான இடங்களை வெல்லும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது.

Lok Sabha election 2024 BJP Congress

இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலில் பாஜகதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலான லோக்சபா தேர்தல் எக்சிட் போல் கணிப்புகள் தெரிவித்து உள்ளன. ஆனால் 2019ல் பெற்றாடை விட குறைவான இடங்களை வெல்லும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்தியா செய்திகள்- டி-டைனமிக்ஸ் கருத்து கணிப்பில் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 371 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணி 125 இடங்களில் வெல்லும், மற்றவைகள் 47 இடங்களில் வெல்லும் என்று தெரிவித்துள்ளது.

Jan Ki Baat கருத்து கணிப்பில் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 362-392 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணி 141 - 161 இடங்களில் வெல்லும், மற்றவைகள் 10-20 இடங்களில் வெல்லும் என்று தெரிவித்துள்ளது.

நியூஸ் 18 எக்ஸிட் போல் : தமிழ்நாட்டில் "இந்தியா" கூட்டணி 36-39 சீட்களில் வெல்லும் என்று CNN நியூஸ் 18 எக்ஸிட் போல் சர்வே தெரிவித்துள்ளது. பாஜக+ 1-3 சீட்களிலும், அதிமுக+ கூட்டணி 0-2 சீட்களிலும் வெல்லும்-நியூஸ் 18 எக்ஸிட் போல் சர்வே தெரிவித்துள்ளது.

என்டிடிவி கருத்து கணிப்பில் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 365 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணி 142 இடங்களில் வெல்லும், மற்றவைகள் 36 இடங்களில் வெல்லும் என்று தெரிவித்துள்ளது.

பாஜக என்டிஏ கூட்டணி 242 இடங்களை மட்டும் வெல்லும் என்று அக்னி நியூஸ் கணிப்பு வெளியிட்டு உள்ளது. மெஜாரிட்டி பெற 272 இடங்கள் தேவை என்று கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 264 இடங்களில் வெல்லும் அக்னி நியூஸ் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. தொங்கு நாடாளுமன்றம் உருவாக வாய்ப்பு உள்ளதாக அக்னி நியூஸ் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.

டிவி 5 தெலுகு கருத்து கணிப்பில் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 359 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணி 154 இடங்களில் வெல்லும், மற்றவைகள் 30 இடங்களில் வெல்லும் என்று தெரிவித்துள்ளது.

நியூஸ் நேஷன் கருத்து கணிப்பில் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 342-378 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணி 169 இடங்களில் வெல்லும், மற்றவைகள் 21-23 இடங்களில் வெல்லும் என்று தெரிவித்துள்ளது.

லோக்போல்: லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 325-335 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று லோக்போல் மெகா சர்வே எக்சிட் போல் தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணி 155-165 இடங்களில் வெல்லும் என்று லோக்போல் மெகா சர்வே எக்சிட் போல் தெரிவித்துள்ளது. மற்ற எதிர்க்கட்சிகள் 48-55 இடங்களில் வெல்லும் என்று லோக்போல் மெகா சர்வேஎக்சிட் போல் தெரிவித்துள்ளது.

ரிபப்ளிக் டிவி-பி மார்க் கருத்து கணிப்பில் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 359 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணி 154 இடங்களில் வெல்லும், மற்றவைகள் 30 இடங்களில் வெல்லும் என்று தெரிவித்துள்ளது.

ரிபப்ளிக் டிவி-பி Matrize கருத்து கணிப்பில் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 353-368 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணி 118-133 இடங்களில் வெல்லும், மற்றவைகள் 43-48 இடங்களில் வெல்லும் என்று தெரிவித்துள்ளது.

கடந்த முறையை விட குறைவு: கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது. ஆனால் இந்த முறை மொத்தமாக பாஜகவின் என்டிஏ கூட்டணி 339-340 இடங்களை வெல்லலாம், அதாவது லேசான சறுக்கல் இருக்கலாம் என்று கணிப்புகள் கூறுகின்றன. அதே சமயம் எதிர்க்கட்சி கூட்டணி 151-164 இடங்களில் வெல்லும் வாய்ப்புகள் இருப்பதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+