மெகா ட்விஸ்ட்.. பாஜகவிற்கு மெஜாரிட்டி இல்லை.. தொங்கு நாடாளுமன்றம்தான்.. கணித்த 10 சட்டா பஜார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் லோக்சபா தேர்தல் 2024ல் எந்த கூட்டணியும் வெற்றிபெறாது, தொங்கு நாடாளுமன்றம் ஏற்படும், யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்று சட்டா பஜார் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பொதுவாக தேர்தல் கணிப்புகளை எக்சிட் போல்களை விட சட்டா பஜார் துல்லியாமாக கணிக்கும். மார்க்கெட் குழுவினர், பெட்டிங் குழுவினர், கணிப்புகளை மேற்கொள்ளும் பல்வேறு குழுவினர், மார்க்கெட்டில் பணம் போட்டு அதை வைத்து பெட்டிங் செய்வோர் என்று பலர் சேர்ந்து மேற்கொள்ளும் கணிப்புகள் ஆகும்.

lok sabha election 2024 bjp congress 2024 politics

இவர்களின் கணிப்புகளும் துல்லியமாக இருக்கும். உதாரணமாக பலோடி சட்டா பஜார் தேர்தல்கள், கிரிக்கெட் போட்டிகள் அல்லது வானிலை முன்னறிவிப்புகளில் துல்லியமான கணிப்புகளை மேற்கொண்ட சிறப்பான ரெக்கார்ட்டை கொண்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் குறைந்த வாக்குப்பதிவு இருந்தபோதிலும், 80 இடங்களில் பாஜக 62 முதல் 65 இடங்களை கைப்பற்றும் என இந்த சட்டா பஜார் கூறியுள்ளது. மார்க்கெட் நிலவரம், வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் என்று பல விஷயங்களை வைத்து இந்த பஜார்கள் கணிப்புகளை மேற்கொள்ளும்.

சட்டா பஜார்: இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியாவில் லோக்சபா தேர்தல் 2024ல் எந்த கூட்டணியும் வெற்றிபெறாது, தொங்கு நாடாளுமன்றம் ஏற்படும், யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்று சட்டா பஜார் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஃபலோடி சட்டா பஜார்:
209 இடங்களில் பாஜக வெல்லும்.
253 இடங்களில் என்டிஏ கூட்டணி வெல்லும்.
117 இடங்களில் காங்கிரஸ் வெல்லும்.
246 இடங்களில் இந்தியா கூட்டணி வெல்லும்.

பாலன்பூர் சட்டா பஜார்:
216 இடங்களில் பாஜக வெல்லும்.
247 இடங்களில் என்டிஏ கூட்டணி வெல்லும்.
112 இடங்களில் காங்கிரஸ் வெல்லும்.
225 இடங்களில் இந்தியா கூட்டணி வெல்லும்.

கர்னல் சட்டா பஜார்:

235 இடங்களில் பாஜக வெல்லும்.
263 இடங்களில் என்டிஏ கூட்டணி வெல்லும்.
108 இடங்களில் காங்கிரஸ் வெல்லும்.
231 இடங்களில் இந்தியா கூட்டணி வெல்லும்.

போஹரி சட்டா பஜார்:
227 இடங்களில் பாஜக வெல்லும்.
255 இடங்களில் என்டிஏ கூட்டணி வெல்லும்.
115 இடங்களில் காங்கிரஸ் வெல்லும்.
212 இடங்களில் இந்தியா கூட்டணி வெல்லும்.

பெல்காம் சட்டா பஜார்:
223 இடங்களில் பாஜக வெல்லும்.
265 இடங்களில் என்டிஏ கூட்டணி வெல்லும்.
120 இடங்களில் காங்கிரஸ் வெல்லும்.
230 இடங்களில் இந்தியா கூட்டணி வெல்லும்.

கொல்கத்தா சட்டா பஜார்:
218 இடங்களில் பாஜக வெல்லும்.
261 இடங்களில் என்டிஏ கூட்டணி வெல்லும்.
128 இடங்களில் காங்கிரஸ் வெல்லும்.
228 இடங்களில் இந்தியா கூட்டணி வெல்லும்.

விஜயவாடா சட்டா பஜார்:
224 இடங்களில் பாஜக வெல்லும்.
251 இடங்களில் என்டிஏ கூட்டணி வெல்லும்.
121 இடங்களில் காங்கிரஸ் வெல்லும்.
237 இடங்களில் இந்தியா கூட்டணி வெல்லும்.

அஹமதாபாத் சோகா பஜார்
241 இடங்களில் பாஜக வெல்லும்.
270 இடங்களில் என்டிஏ கூட்டணி வெல்லும்.
104 இடங்களில் காங்கிரஸ் வெல்லும்.
193 இடங்களில் இந்தியா கூட்டணி வெல்லும்.

சூரத் மகோபி சட்டா பஜார்

247 இடங்களில் பாஜக வெல்லும்.
282 இடங்களில் என்டிஏ கூட்டணி வெல்லும்.
96 இடங்களில் காங்கிரஸ் வெல்லும்.
186 இடங்களில் இந்தியா கூட்டணி வெல்லும்.

மேற்கண்ட கணிப்புகள் அனைத்திலும் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி இல்லை. சூரத்தில் மட்டும் என்டிஏவிற்கு மெஜாரிட்டி கிடைத்துள்ளது. ஆனால் பாஜகவிற்கு மெஜாரிட்டி இல்லை. இந்த சட்டா பஜார் கணிப்புகள் தற்போது தேசிய அளவில் விவாதம் ஆகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+