பாஜக கூட்டணி மெஜாரிட்டி கிடைக்காது! மோடி ஆட்சி ஓவர்.. தொங்கு நாடாளுமன்றம்தான்! அக்னி நியூஸ் கணிப்பு
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் பாஜக என்டிஏ கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காது என்று அக்னி நியூஸ் கணிப்பு வெளியிட்டு உள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது.

இந்த நிலையில்தான் பாஜக என்டிஏ கூட்டணி 242 இடங்களை மட்டும் வெல்லும் என்று அக்னி நியூஸ் கணிப்பு வெளியிட்டு உள்ளது. மெஜாரிட்டி பெற 272 இடங்கள் தேவை என்று கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 264 இடங்களில் வெல்லும் அக்னி நியூஸ் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. தொங்கு நாடாளுமன்றம் உருவாக வாய்ப்பு உள்ளதாக அக்னி நியூஸ் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.
37 இடங்களில் இந்திய கூட்டணியில் இல்லாத மற்ற எதிர்க்கட்சிகள் வெல்லும் என்று அக்னி நியூஸ் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 20க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சிகள் இணைந்து இந்தியா என்ற மிகப்பெரிய கூட்டணியுடன் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் தனிப்பெரும் கூட்டணியாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுவரை வெளியான கணிப்புகளில் இந்த கணிப்பில் மட்டுமே இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக சர்வே கொடுக்கப்பட்டு உள்ளது.
தீவிரமான தேர்தல்: லோக்சபா தேர்தல்: உலக வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப் பெரிய தேர்தல் இது. முந்தைய தேர்தலை விஞ்சி, 44 நாட்கள் நீடிக்கும் நீண்ட தேர்தல் ஆகும். 1951-52 இந்தியப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இவ்வளவு அதிக நாட்கள் ஒரு தேர்தல் நடக்கிறது. இரண்டு முறை பிரதமராக இருந்த மோடி தலைமையிலான "மோடி கேரண்டி" கோஷத்துடன் மீண்டும் மூன்றாவது முறையாக தேர்தலை எதிர்கொள்கிறார்.
நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் மூன்று கட்டத் தேர்தலில் முறையே 66.1, 66.7 மற்றும் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலை விட இதுவரை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. அதன்பின் 4ம் கட்ட தேர்தல் 9 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் நடந்தது. ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 67.25 சதவிகித வாக்குகள் பதிவானது.
தொடர்ந்து 6 மாநிலங்களில் 5ம் கட்ட தேர்தல் நடந்தது. இதில் 60.48% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதன்பின்பான ஆறாவது கட்டத் தேர்தலில் எட்டு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் (UTs) மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதையடுத்து இன்று கடைசி கட்ட தேர்தல் நடந்தது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications