மோடி ஹாட் ட்ரிக்.. மீண்டும் பாஜக ஆட்சிதான்.. லோக்சபா எக்சிட் போல் கணிப்புகள் சொல்வது என்ன?
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் பாஜகதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலான லோக்சபா தேர்தல் எக்சிட் போல் கணிப்புகள் தெரிவித்து உள்ளன.
நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் மூன்று கட்டத் தேர்தலில் முறையே 66.1, 66.7 மற்றும் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலை விட இதுவரை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. அதன்பின் 4ம் கட்ட தேர்தல் 9 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் நடந்தது. ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 67.25 சதவிகித வாக்குகள் பதிவானது.

தொடர்ந்து 6 மாநிலங்களில் 5ம் கட்ட தேர்தல் நடந்தது. இதில் 60.48% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதன்பின்பான ஆறாவது கட்டத் தேர்தலில் எட்டு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் (UTs) மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதையடுத்து இன்று கடைசி கட்ட தேர்தல் நடந்தது.
கடந்த தேர்தல்: கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது.
இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலில் பாஜகதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலான லோக்சபா தேர்தல் எக்சிட் போல் கணிப்புகள் தெரிவித்து உள்ளன.
மொத்த கணிப்பு:
1. நியூஸ் 18 எக்ஸிட் போல் : தமிழ்நாட்டில் "இந்தியா" கூட்டணி 36-39 சீட்களில் வெல்லும் என்று CNN நியூஸ் 18 எக்ஸிட் போல் சர்வே தெரிவித்துள்ளது. பாஜக+ 1-3 சீட்களிலும், அதிமுக+ கூட்டணி 0-2 சீட்களிலும் வெல்லும்-நியூஸ் 18 எக்ஸிட் போல் சர்வே தெரிவித்துள்ளது.
2. லோக்போல்: லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 325-335 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று லோக்போல் மெகா சர்வே எக்சிட் போல் தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணி 155-165 இடங்களில் வெல்லும் என்று லோக்போல் மெகா சர்வே எக்சிட் போல் தெரிவித்துள்ளது. மற்ற எதிர்க்கட்சிகள் 48-55 இடங்களில் வெல்லும் என்று லோக்போல் மெகா சர்வேஎக்சிட் போல் தெரிவித்துள்ளது.
3. ரிபப்ளிக் டிவி-பி மார்க் கருத்து கணிப்பில் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 359 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணி 154 இடங்களில் வெல்லும், மற்றவைகள் 30 இடங்களில் வெல்லும் என்று தெரிவித்துள்ளது.
4. ரிபப்ளிக் டிவி-பி Matrize கருத்து கணிப்பில் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 353-368 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணி 118-133 இடங்களில் வெல்லும், மற்றவைகள் 43-48 இடங்களில் வெல்லும் என்று தெரிவித்துள்ளது.
5. இந்தியா செய்திகள்- டி-டைனமிக்ஸ் கருத்து கணிப்பில் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 371 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணி 125 இடங்களில் வெல்லும், மற்றவைகள் 47 இடங்களில் வெல்லும் என்று தெரிவித்துள்ளது.
6. Jan Ki Baat கருத்து கணிப்பில் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 362-392 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணி 141 - 161 இடங்களில் வெல்லும், மற்றவைகள் 10-20 இடங்களில் வெல்லும் என்று தெரிவித்துள்ளது.
7. டிவி 5 தெலுகு கருத்து கணிப்பில் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 359 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணி 154 இடங்களில் வெல்லும், மற்றவைகள் 30 இடங்களில் வெல்லும் என்று தெரிவித்துள்ளது.
8. நியூஸ் நேஷன் கருத்து கணிப்பில் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 342-378 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணி 169 இடங்களில் வெல்லும், மற்றவைகள் 21-23 இடங்களில் வெல்லும் என்று தெரிவித்துள்ளது.
9. என்டிடிவி கருத்து கணிப்பில் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 365 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணி 142 இடங்களில் வெல்லும், மற்றவைகள் 36 இடங்களில் வெல்லும் என்று தெரிவித்துள்ளது.
10. இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போல்: பாஜக என்டிஏ கூட்டணி 361-401 இடங்கள் வெல்லும். இந்தியா 131-166 இடங்கள் வெல்லும். மற்றவர்கள் 08-20 இடங்களில் வெல்வார்கள்.
11 ஒரே ஒரு கணிப்பு: பாஜக என்டிஏ கூட்டணி 242 இடங்களை மட்டும் வெல்லும் என்று அக்னி நியூஸ் கணிப்பு வெளியிட்டு உள்ளது. மெஜாரிட்டி பெற 272 இடங்கள் தேவை என்று கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 264 இடங்களில் வெல்லும் அக்னி நியூஸ் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. தொங்கு நாடாளுமன்றம் உருவாக வாய்ப்பு உள்ளதாக அக்னி நியூஸ் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. 37 இடங்களில் இந்திய கூட்டணியில் இல்லாத மற்ற எதிர்க்கட்சிகள் வெல்லும் என்று அக்னி நியூஸ் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 20க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சிகள் இணைந்து இந்தியா என்ற மிகப்பெரிய கூட்டணியுடன் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் தனிப்பெரும் கூட்டணியாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுவரை வெளியான கணிப்புகளில் இந்த கணிப்பில் மட்டுமே இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக சர்வே கொடுக்கப்பட்டு உள்ளது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!











Click it and Unblock the Notifications