Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாக்குப்பதிவு 72 ஆ 69 சதவீதமா? தேர்தல் ஆணையத்தின் மாறுபட்ட தகவலால் “ஷாக்”.. எப்படி நடந்தது குழப்பம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று இரவு 7 மணியளவில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்குப்பதிவு பட்டியலில் வாக்குப்பதிவு 72.09% என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு மேல் வெளியிடப்பட்ட பட்டியலில் வாக்குப்பதிவு 69.46% எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18வது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நேற்று தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நேற்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நேற்று நடைபெற்றது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Lok sabha Polling percentage in TamilNadu is 69 as per Election commission Latest update

நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. மாலை ஆறு மணிக்கு முன்பாக வந்து வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 7 மணி முதலே மக்கள் ஆர்வமாக வந்து வாக்களிக்கத் தொடங்கினர்.

நேற்று இரவு 7 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டின் மொத்த வாக்குப் பதிவு 72.09% என தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டது. முழுமையான பட்டியல் பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

Lok sabha Polling percentage in TamilNadu is 69 as per Election commission Latest update

கள்ளக்குறிச்சி 75.67%;தருமபுரி 75.44%; சிதம்பரம் 74.87%; பெரம்பலூர் 74.46%;
நாமக்கல் 74.29%; கரூர்- 74.05%; அரக்கோணம் 73.92%; ஆரணி 73.77%;
சேலம் 73.55%; விழுப்புரம் 73.49%; திருவண்ணாமலை 73.35%
வேலூர் 73.04%; காஞ்சிபுரம் 72.99%; கிருஷ்ணகிரி 72.96%; கடலூர் 72.40%; விருதுநகர் 72.29%; பொள்ளாச்சி 72.22%; நாகப்பட்டினம் 72.21%; திருப்பூர் 72.02%; திருவள்ளூர்- 71.87%; தேனி 71.74%; மயிலாடுதுறை 71.45%; ஈரோடு 71.42%; திண்டுக்கல் 71.37%; திருச்சி 71.20%; கோவை 71.17%; நீலகிரி 71.07%; தென்காசி 71.06%; சிவகங்கை 71.05%; ராமநாதபுரம் 71.05% ; தூத்துக்குடி 70.93%; நெல்லை 70.46%; கன்னியாகுமரி 70.15%; தஞ்சாவூர் 69.82%; ஸ்ரீபெரும்புதூர் 69.79%; வடசென்னை 69.26%; மதுரை 68.98%; தென்சென்னை 67.82%; மத்திய சென்னை 67.35%

எனினும், நள்ளிரவில் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு விவரம் தொடர்பாக மற்றொரு பட்டியலை வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதம் 69.46 % என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடசென்னை 60.13%
தென்சென்னை 54.27%
மத்திய சென்னை 53.91%
திருப்பெரும்புதூர் 60.21%
கோவை 64.81%
தருமபுரி 81.48%
கள்ளக்குறிச்சி 79.25%
சேலம் 78.13%
நாமக்கல் 78.16%

முன்னதாக, சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் 67 சதவீதம் என்ற அளவில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், கடைசியாக அப்டேட் செய்யப்பட்ட தகவலின்படி, வட சென்னையில் 60.3% வாக்குப்பதிவு, தென்சென்னையில் 54.27%, மத்திய சென்னையில் 53.91% வாக்குப்பதிவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் 72.44% வாக்குகள் பதிவான நிலையில், தற்போது அதைவிட 3% வாக்குகள் குறைவாக பதிவாகி, 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு முழுமையான விவரம் இன்று வெளியிடப்படும் எனத் தெரிகிறது. முன்னதாக 7 மணியளவில் தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு நிலவரத்தை வெளியிட்டபோது குழப்பத்தால் கூடுதலகாக வாக்குப்பதிவு நிலவரத்தை வெளியிட்டிருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

நேற்று இரவு 7 மணியளவில் வெளியிட்ட வாக்குப்பதிவு விவரம், வாக்குச்சாவடி முகவர்கள் அளித்த தகவலின்படி வெளியிடப்பட்ட தோராயமான வாக்குப்பதிவு நிலவர பட்டியல் என்றும், அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு சதவீதம், நள்ளிரவில் வெளியிடப்பட்டது தான் என்றும் தெரிகிறது.

எனினும், தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு முழுமையான விவரம் இன்று 11 மணிக்கு மேல் வெளியிடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இதனை தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+