பாஜகவைவிட கம்மிதான்.. தமிழ்நாட்டில் அதிமுக எத்தனை இடங்களில் வெல்லும்.. கருத்து கணிப்பில் சுவாரசியம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் 2024ல் தமிழ்நாட்டில் அதிமுக எத்தனை இடங்களை வெல்லும் என்று டைம்ஸ் நவ் இடிஜி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டைம்ஸ் நவ் - இடிஜி கருத்துக்கணிப்பின்படி, தமிழகத்தில் மொத்தம் 39 இடங்கள் உள்ளன. வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க 21-22 இடங்களைப் பிடிக்கும். அதாவது திமுகவின் சின்னம் மட்டும் 22 இடங்கள் வரை வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

Lok sabha Prediction AIADMK will win less seats than BJP in Tamil Nadu says Times Now ETG survey


திமுக சின்னம் போட்டியிடுவதே 21 சின்னம்தான். அதே நேரத்தில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 5 முதல் 7 இடங்களைப் பிடிக்கும் என்று இந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், 2019-ல் தமிழ்நாட்டில் தனது கணக்கைத் திறக்கத் தவறிய பா.ஜ.க
தேர்தல்களில் இரண்டு முதல் ஆறு இடங்களை பிடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கணிப்பில். பாஜகவின் முன்னாள் கூட்டணி கட்சியான அதிமுக ஒன்று முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவை விட அதிமுகவிற்கு குறைவான இடங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.

அதிமுக இல்லாமல் மற்றவர்கள் நான்கிலிருந்து ஐந்து இடங்களைப் பெறலாம். அதாவது இந்த மற்ற கட்சிகள் திமுக கூட்டணியில் தனி சின்னத்தில் போட்டியிடும் விசிக போன்ற கட்சிகளோ, அதிமுக கூட்டணியில் தனி சின்னத்தில் நிற்கும் தேமுதிக போன்ற கட்சிகளா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கேரளா கணிப்பு சொல்வது என்ன; கேரளா (மொத்த இடங்கள்: 20)

- பாஜக : 0-1
- காங்கிரஸ் : 8-10
- சிபிஎம் : 6-8
- ஐயுஎம்எல் : 1-2
- மற்றவர்கள் : 1-2

கர்நாடக கணிப்பு சொல்வது என்ன;

கர்நாடகா (,மொத்த இடங்கள்: 28)

- பாஜக : 21-23
- காங்கிரஸ் : 4-6
- ஜேடிஎஸ் : 1-2
- மற்றவர்கள் : 0


தெலுங்கானா கணிப்பு சொல்வது என்ன? தெலுங்கானா (மொத்த இடங்கள்: 17)

- பிஆர்எஸ் : 1-3
- பாஜக : 4-6
- காங்கிரஸ் : 8-10
- AIMIM: 0-2
- மற்றவர்கள் : 0

ஆந்திர பிரதேசம் கணிப்பு சொல்வது என்ன? :

ஆந்திர பிரதேசம் (மொத்த இடங்கள்: 25)

- ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் : 21-22
- பாஜக : 0
- டிடிபி +ஜேஎஸ்பி : 3-4
- மற்றவர்கள் : 0

பாஜக ஆட்சி: லோக்சபா தேர்தல் பிரச்சாரங்கள் நாடு முழுக்க தீவிரமாக நடந்து வருகின்றது. இது தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் லோக்சபா தேர்தல் தொடர்பாக டைம்ஸ் நவ் - இடிஜி கருத்து கணிப்புகளை மேற்கொண்டு உள்ளன.

டைம்ஸ் நவ் - இடிஜி கருத்துக்கணிப்பின்படி, இந்தியாவில் மீண்டும் பாஜகதான் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

மொத்தமான ரிசல்ட்: மொத்தமாக லோக்சபா தேர்தலில் ,

மொத்த இடங்கள்: 543) || மெஜாரிட்டி 272

- பாஜக: 329-359
- காங்கிரஸ்: 27-47
- YSRCP: 21-22
- திமுக: 24-28
- டிஎம்சி: 17-21
- BJD: 10-12
- ஆம் ஆத்மி: 5-7
- மற்றவை: 72-92

என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+