லோக்சபா தேர்தலில் இந்த முறை வெல்லப்போவது யார்? பாஜக மீண்டும் ஆட்சி அமைக்குமா? வெளியான சர்வே
சென்னை: டைம்ஸ் நவ் - இடிஜி கருத்துக்கணிப்பின்படி, இந்தியாவில் மீண்டும் பாஜகதான் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. பாஜகவிற்கு எத்தனை இடங்களில் இதில் கொடுக்கப்பட்டுள்ளன என்று பார்க்கலாம்.
லோக்சபா தேர்தல் களம் நாடு முழுக்க சூடு பிடித்துள்ளது. லோக்சபா தேர்தல் பிரச்சாரங்கள் நாடு முழுக்க தீவிரமாக நடந்து வருகின்றது. இது தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் லோக்சபா தேர்தல் தொடர்பாக டைம்ஸ் நவ் - இடிஜி கருத்து கணிப்புகளை மேற்கொண்டு உள்ளன.

டைம்ஸ் நவ் - இடிஜி கருத்துக்கணிப்பின்படி, இந்தியாவில் மீண்டும் பாஜகதான் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.
மொத்தமான ரிசல்ட்: மொத்தமாக லோக்சபா தேர்தலில் ,
மொத்த இடங்கள்: 543) || மெஜாரிட்டி 272
- பாஜக: 329-359
- காங்கிரஸ்: 27-47
- YSRCP: 21-22
- திமுக: 24-28
- டிஎம்சி: 17-21
- BJD: 10-12
- ஆம் ஆத்மி: 5-7
- மற்றவை: 72-92
என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாஜக இலக்கு; பாரதிய ஜனதா கட்சி (BJP) 2024 லோக்சபா தேர்தலில் 370 இடங்களை வெல்வதை லட்சிய இலக்காக நிர்ணயித்துள்ளது. 2019 ஐ விட 67 இடங்கள் அதிகம் வெல்வோம் என்று பாஜக தலைவர்கள் மேடைக்கு மேடை அறிவித்து வருகின்றனர். ஆனால் பாஜகவால் இந்த இலக்கை அடைய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜக தனியாக 370 இடங்களை வெல்வதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) 400 ரன்களை கடக்க வாய்ப்பாக அமையும் என்பதால் பாஜக இந்த மாபெரும் இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. . மக்களவையில் 543 இடங்கள் உள்ளன, பாஜக 2014 மற்றும் 2019 இல் முறையே 282 மற்றும் 303 இடங்களை வென்றது.
370 என்ற இலக்கை.. ஜம்மு காஷ்மீரின் 370 நீக்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவினர் இணைத்து பேசி வருகின்றனர்.ஆனால் கடந்த முறை வென்றதில் இருந்து கூடுதலாக 67 இடங்களை சேர்ப்பது என்பது பாஜகவிற்கு மிகவும் கடினமான பணியாக இருக்கலாம். இந்த நிலையில்தான் டைம்ஸ் நவ் கணிப்பில் பாஜகவிற்கு அதிகபட்சம் 359 இடங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு நிலவரம்: தமிழகத்தில் மொத்தம் 39 இடங்கள் உள்ளன. வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க 21- 22 இடங்களைப் பிடிக்கும். அதாவது திமுகவின் சின்னம் மட்டும் 22 இடங்கள் வரை வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
திமுக சின்னம் போட்டியிடுவதே 21 சின்னம்தான். அதே நேரத்தில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 5 முதல் 7 இடங்களைப் பிடிக்கும் என்று இந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், 2019-ல் தமிழ்நாட்டில் தனது கணக்கைத் திறக்கத் தவறிய பா.ஜ.க
தேர்தல்களில் இரண்டு முதல் ஆறு இடங்களை பிடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கணிப்பில். பாஜகவின் முன்னாள் கூட்டணி கட்சியான அதிமுக ஒன்று முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக இல்லாமல் மற்றவர்கள் நான்கிலிருந்து ஐந்து இடங்களைப் பெறலாம். அதாவது இந்த மற்ற கட்சிகள் திமுக கூட்டணியில் தனி சின்னத்தில் போட்டியிடும் விசிக போன்ற கட்சிகளோ, அதிமுக கூட்டணியில் தனி சின்னத்தில் நிற்கும் தேமுதிக போன்ற கட்சிகளா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அல்லது நாம் தமிழரின் வெற்றியை பற்றிய கணிப்பா இது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த முறை தனி சின்னத்தில் மதிமுக, விசிக, பாமக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிடுகின்றன.
-
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
"சிதமுக-விற்கு லக்".. அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. ஒரு தொகுதியை ஒதுக்கிய எடப்பாடி பழனிச்சாமி! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications