Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்தியில் மீண்டும் அரியணை ஏறும் மோடி.. பாஜக ஆட்சி கன்பார்ம்.. அடித்து சொல்லும் டைம்ஸ் நவ் கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று டைம்ஸ் நவ் இடிஜி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாரதிய ஜனதா கட்சி (BJP) 2024 லோக்சபா தேர்தலில் 370 இடங்களை வெல்வதை லட்சிய இலக்காக நிர்ணயித்துள்ளது. 2019 ஐ விட 67 இடங்கள் அதிகம் வெல்வோம் என்று பாஜக தலைவர்கள் மேடைக்கு மேடை அறிவித்து வருகின்றனர். ஆனால் பாஜகவால் இந்த இலக்கை அடைய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Lok sabha Prediction survey BJP can win 330-360 seats and Modi again in India says Times Now ETG survey


பாஜக தனியாக 370 இடங்களை வெல்வதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) 400 ரன்களை கடக்க வாய்ப்பாக அமையும் என்பதால் பாஜக இந்த மாபெரும் இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. . மக்களவையில் 543 இடங்கள் உள்ளன, பாஜக 2014 மற்றும் 2019 இல் முறையே 282 மற்றும் 303 இடங்களை வென்றது.

370 என்ற இலக்கை.. ஜம்மு காஷ்மீரின் 370 நீக்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவினர் இணைத்து பேசி வருகின்றனர்.ஆனால் கடந்த முறை வென்றதில் இருந்து கூடுதலாக 67 இடங்களை சேர்ப்பது என்பது பாஜகவிற்கு மிகவும் கடினமான பணியாக இருக்கலாம்.

பாஜகவிற்கு இலக்கு கஷ்டம்: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பெரும்பாலான அரசியல் ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்டாலும், 370 இடங்கள் என்பது அக்கட்சிக்கு மிகவும் கடினமான ஒன்றாகும். 2019ல் பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களில் எல்லாம் அதே மாதிரி வெற்றியை மீண்டும் பாஜக பதிவு செய்ய வேண்டும்.

இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று டைம்ஸ் நவ் இடிஜி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்து கணிப்பு: இந்தியாவில் மத்தியில் ஆட்சி அமைக்க போவது யார்? (ஒட்டுமொத்த மொத்த இடங்கள்: 543) | மெஜாரிட்டி 272

பாஜக கூட்டணி : 366-406
இந்தியா கூட்டணி: 108-128
ஒய்எஸ்ஆர்பி:19-20
பிஜேடி:10-12
மற்றவை: 7-9

தனியாக கட்சி ரீதியாக வெற்றி வாய்ப்பு:

பாஜக - 330 - 360 இடங்களை வெல்லும்
காங்கிரஸ் - 26- 36 இடங்களை வெல்லும்
திமுக 20-21 இடங்களை வெல்லும்
ஒய்எஸ்ஆர்பி:19-20 இடங்களை வெல்லும்
திரிணாமூல் காங்கிரஸ் - 17-20 இடங்களை வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாஜக மீண்டும் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக 303 இடங்களை வென்ற நிலையில் அதைவிட 27-57 இடங்களை கூடுதலாக பாஜக வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு கணிப்பு: தமிழ்நாட்டில் கூட்டணி ரீதியாக வெற்றி வாய்ப்பு உள்ள இடங்கள்

- திமுக கூட்டணி: 31-33 இடங்களை வெல்லும் வாய்ப்பு உள்ளது
- அதிமுக கூட்டணி: 2-6 இடங்களை வெல்லும் வாய்ப்பு உள்ளது
- பாஜக கூட்டணி: 1-3 இடங்களை வெல்லும் வாய்ப்பு உள்ளது

தமிழ்நாட்டில் திமுக மீண்டும் வெற்றிபெறும். ஆனால் முன்பு வென்ற 38 இடங்களை வெல்லாது. மாறாக 7 இடங்கள் வரை குறைவாக வெல்லும் வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம் தமிழ்நாட்டில் 2-6 இடங்களில் பாஜக வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக லோக்சபா தேர்தல் 2024 தொடர்பாக டைம்ஸ் நவ் இடிஜி எடுத்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+