அடிச்சு தூக்குது பாஜக! தமிழ்நாட்டில் இரட்டை இலக்கை பெறும் தாமரை.. மலருதாமே! பிரஷாந்த் கிஷோர் கணிப்பு
சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக இரட்டை இலக்கு இடங்களை பெறும் வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. இந்த சர்வேக்கள் பல்வேறு அதிர்ச்சி தரும் சுவாரசியமான விஷயங்களை வெளியிட்டு வருகின்றன. டைம்ஸ் நவ் - மேட்ரைஸ் என்சி இது தொடர்பாக கருத்து கணிப்புகளை மேற்கொண்டு உள்ளன.

மொத்தமாக ரிசல்ட் என்ன: மக்களவையின் ஒட்டுமொத்த கணிப்பு:
மொத்த இடங்கள்: 543
பாஜக கூட்டணி: 366
இந்தியா கூட்டணி: 104
மற்றவை: 73
மீண்டும் பாஜக ஆட்சி: இதன் மூலம் பாஜக மீண்டும் முழு பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. 3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
அதுபோக தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்றும் கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. . தமிழ்நாடு (மொத்த இடங்கள்- 39): லோக்சபா தொகுதி கணிப்புகள் இதோ:
- பாஜக: 1
- திமுகவின் இந்தியா கூட்டணி - 36
- அதிமுக: 2
- மற்றவை: 0
தமிழ்நாட்டில் தோல்வி: அதே சமயம் தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வி அடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு (மொத்த இடங்கள்- 39): லோக்சபா தொகுதி கணிப்புகள் படி பாஜக: 1 இடத்தில் மட்டுமே வெல்லும். திமுகவின் இந்தியா கூட்டணி - 36 இடங்களில் வெல்லும். 39 இடங்களில் இருந்து 3 இடங்களை திமுக இழக்கும் என்றாலும், பெரும்பான்மை இடங்களில் திமுகவே வெல்லும். அதிமுக: 2 இடங்களில் வெல்லும். கடந்த முறை ஒரு தொகுதியில் வென்ற அதிமுக இந்த முறை 2 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
பாஜக முந்தும்: திமுக கூட்டணி லோக்சபா தேர்தலில் 59.7 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதேபோல் பாஜக 20.6 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதிமுக 16 சதவிகித கருத்து கணிப்புகளை பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் பாஜக அதிரடி: இப்படி வரிசையாக பாஜகவிற்கு ஆதரவாக பல்வேறு கணிப்புகள் வர தொடங்கி உள்ளன. இந்த நிலையில்தான், பிரசாந்த் கிஷோர், பாஜக தனித்து 370 மக்களவைத் தொகுதிகளைப் பெற்றால் மிகவும் ஆச்சரியப்படுவேன் என்று கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், வங்காளத்தில் பா.ஜ.க, சிறப்பாக செயல்பட வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில், பா.ஜ.க, முதல் முறையாக, இரட்டை இலக்கத்தை எட்டக்கூடும். தெலுங்கானாவிலும், பா.ஜ.க, சிறப்பாக செயல்படும். ஆனால் 370 இடங்கள் என்பது சாத்தியம் இல்லை.
தேசிய அளவில் பாஜக தனியாக 370 எல்லாம் எடுக்க சான்ஸ் குறைவு. பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் இந்த எண்ணிக்கையைப் பற்றி பேசினார். ஆனால் இது பாஜக தொண்டர்களுக்கான இலக்கு என்று நான் நினைக்கிறேன், நிஜத்தில் சாத்தியம் அல்ல.
370வது சட்டப்பிரிவின் பின்னணியில் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் 370 என்ற எண்ணிக்கையை நரேந்திர மோடி குறிப்பிட்டார், 370வது சட்ட பிரிவை பாஜக நீக்கியது. இதனால் பாஜக தனியாக 370 இடங்களைப் பெறும் என்று மோடி நம்புகிறார். சில இடங்களில் என்டிஏ 400 ஐத் தாண்டும் என்றும் மோடி கூறினார். அவர் உரையாற்றிய பல பேரணிகளில் 370 இடங்கள் இலக்கு என்று போஸ்டர்கள் வைக்கப்படுகின்றன, என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications