யோசிக்கவே முடியாத ட்விஸ்ட்! தமிழ்நாட்டில் காங்கிரசை விட அதிக வாக்குகளை பெறும் பாஜக? டைம்ஸ் நவ்
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரசை விட பாஜக அதிக வாக்கு வங்கியை பெறும் என்று டைம்ஸ் நவ் இடிஜி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2024 லோக்சபா தேர்தல் கணிப்புகளை பார்க்கும் முன் 2019 லோக்சபா தேர்தலில் கட்சிகள் பெற்ற தனி தனி வாக்கு சதவிகிதங்களை பார்க்கலாம்.

திமுக கூட்டணி 53.15% வாக்கு சதவிகிதங்களை பெற்றது
திமுக 33.52% வாக்கு சதவிகிதங்களை பெற்றது
காங்கிரஸ் 12.61% வாக்கு சதவிகிதங்களை பெற்றது
அதிமுக கூட்டணி 30.57% வாக்கு சதவிகிதங்களை பெற்றது
அதிமுக 19.39% வாக்கு சதவிகிதங்களை பெற்றது
பாஜக 3.66% வாக்கு சதவிகிதங்களை பெற்றது
பாமக 5.36% வாக்கு சதவிகிதங்களை பெற்றது
தேமுதிக 2.16% வாக்கு சதவிகிதங்களை பெற்றது
நாம் தமிழர் கட்சி 3.90% வாக்கு சதவிகிதங்களை பெற்றது
2024 லோக்சபா தேர்தல் டைம்ஸ் நவ் இடிஜி கருத்து கணிப்பு: டைம்ஸ் நவ் - இடிஜி கருத்துக்கணிப்பின்படி,
தமிழ்நாடு (மொத்த இடங்கள்: 39)
- திமுக (யுபிஏ): 26% வாக்கு சதவிகிதம் பெறும்
- காங்கிரஸ்: 18% வாக்கு சதவிகிதம் பெறும்
- அதிமுக: 17% வாக்கு சதவிகிதம் பெறும்
- பாஜக: 19% வாக்கு சதவிகிதம் பெறும்
- மற்றவை: 20% வாக்கு சதவிகிதம் பெறும்
அதன்படி காங்கிரசை விட பாஜக 1 சதவிகிதம் கூடுதலாக வாக்கு சதவிகிதம் பெறும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு (மொத்த இடங்கள்: 39) || கட்சி ரீதியாக வெற்றி வாய்ப்பு உள்ள இடங்கள்
- திமுக: 20-21 இடங்களை வெல்லும் வாய்ப்பு
- காங்கிரஸ்: 5-7 இடங்களை வெல்லும் வாய்ப்பு
- அதிமுக: 1-3 இடங்களை வெல்லும் வாய்ப்பு
- பாஜக: 2-6 இடங்களை வெல்லும் வாய்ப்பு
- மற்றவை: 5-7 இடங்களை வெல்லும் வாய்ப்பு
இடங்கள் ரீதியாக காங்கிரசை விட பாஜக குறைவாக 1 இடம் வெல்லும் வாய்ப்புகள் உள்ளதாக கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கூட்டணி ரீதியாக வெற்றி வாய்ப்பு உள்ள இடங்கள்
- திமுக கூட்டணி: 31-33 இடங்களை வெல்லும் வாய்ப்பு உள்ளது
- அதிமுக கூட்டணி: 2-6 இடங்களை வெல்லும் வாய்ப்பு உள்ளது
- பாஜக கூட்டணி: 1-3 இடங்களை வெல்லும் வாய்ப்பு உள்ளது
தமிழ்நாட்டில் திமுக மீண்டும் வெற்றிபெறும். ஆனால் முன்பு வென்ற 38 இடங்களை வெல்லாது. மாறாக 7 இடங்கள் வரை குறைவாக வெல்லும் வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம் தமிழ்நாட்டில் 2-6 இடங்களில் பாஜக வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக லோக்சபா தேர்தல் 2024 தொடர்பாக டைம்ஸ் நவ் இடிஜி எடுத்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மொத்தமாக கணிப்பு: இந்தியாவில் மத்தியில் ஆட்சி அமைக்க போவது யார்? (ஒட்டுமொத்த மொத்த இடங்கள்: 543) | மெஜாரிட்டி 272
பாஜக கூட்டணி : 366-406
இந்தியா கூட்டணி: 108-128
திமுக 20-21
ஒய்எஸ்ஆர்பி:19-20
பிஜேடி:10-12
மற்றவை: 7-9
பாஜக மீண்டும் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications