இது லிஸ்டுலேயே இல்லையே.. அதிமுகவை விட அதிக வாக்கு வங்கி பெற்ற பாஜக.. கருத்து கணிப்பில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுகவை விட பாஜக அதிக வாக்கு வங்கியை பெறும் என்று டைம்ஸ் நவ் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

லோக்சபா தேர்தல் தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. இந்த சர்வேக்கள் பல்வேறு அதிர்ச்சி தரும் சுவாரசியமான விஷயங்களை வெளியிட்டு வருகின்றன. டைம்ஸ் நவ் - மேட்ரைஸ் என்சி இது தொடர்பாக கருத்து கணிப்புகளை மேற்கொண்டு உள்ளன.

Lok sabha Prediction survey: BJP to get more vote bank then AIADMK says Survey by Times Now - Matrize Poll

மொத்தமாக ரிசல்ட் என்ன: மக்களவையின் ஒட்டுமொத்த கணிப்பு:

மொத்த இடங்கள்: 543

பாஜக கூட்டணி: 366
இந்தியா கூட்டணி: 104
மற்றவை: 73

மீண்டும் பாஜக ஆட்சி: இதன் மூலம் பாஜக மீண்டும் முழு பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. 3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

லோக்சபா தேர்தல் கணிப்பு; அதுபோக தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்றும் கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. . தமிழ்நாடு (மொத்த இடங்கள்- 39): லோக்சபா தொகுதி கணிப்புகள் இதோ:

- பாஜக: 1
- திமுகவின் இந்தியா கூட்டணி - 36
- அதிமுக: 2
- மற்றவை: 0

தமிழ்நாட்டில் தோல்வி: அதே சமயம் தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வி அடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு (மொத்த இடங்கள்- 39): லோக்சபா தொகுதி கணிப்புகள் படி பாஜக: 1 இடத்தில் மட்டுமே வெல்லும். திமுகவின் இந்தியா கூட்டணி - 36 இடங்களில் வெல்லும். 39 இடங்களில் இருந்து 3 இடங்களை திமுக இழக்கும் என்றாலும், பெரும்பான்மை இடங்களில் திமுகவே வெல்லும். அதிமுக: 2 இடங்களில் வெல்லும். கடந்த முறை ஒரு தொகுதியில் வென்ற அதிமுக இந்த முறை 2 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

பாஜக முந்தும்: திமுக கூட்டணி லோக்சபா தேர்தலில் 59.7 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதேபோல் பாஜக 20.6 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதிமுக 16 சதவிகித கருத்து கணிப்புகளை பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

அதாவது இந்த முறை பாஜக அதிமுகவை விட அதிக வாக்குகள் பெறும். முதல்முறையாக பாஜகவின் வாக்கு வங்கி அதிமுகவை முந்தும். தமிழ்நாட்டில் பாஜக இரண்டாம் இடத்தை பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

மற்ற மாநிலங்களில் நிலை எப்படி: உத்தரப் பிரதேசம் (மொத்த இடங்கள்: 80): மக்களவைத் தொகுதிப் கணிப்புகள் இதோ.

பாஜக+: 77
இந்தியா: 3
பிஎஸ்பி: 0 ஆகிய இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

சத்தீஸ்கர் (மொத்த இடங்கள்: 11): லோக்சபா தொகுதி கணிப்புகள் இதோ:

பாஜக: 11
காங்: 0
மற்றவை: 0

குஜராத் (மொத்த இடங்கள்: 26): லோக்சபா தொகுதிப் கணிப்புகள் இதோ:

பாஜக: 26
காங்: 0
AAP+: 0
மற்றவை: 0

ராஜஸ்தான் (மொத்த இடங்கள்: 25): லோக்சபா தொகுதி கணிப்புகள் இதோ:

பாஜக: 25
காங்: 0
மற்றவை: 0

மத்தியப் பிரதேசம் (மொத்த இடங்கள் - 29): லோக்சபா சீட்-கணிப்புகள் இதோ:

பாஜக: 28
காங்: 1
மற்றவை: 0

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+