Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லோக்சபா தேர்தலில்.. தென்னிந்தியாவில் காங்கிரஸ் "ராஜா".. ஆனால் அடிச்சு முன்னேறும் மோடி.. பரபர கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட தென் மாநிலங்களில் மொத்தமுள்ள 130 மக்களவைத் தொகுதிகளில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி 60 இடங்களையும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக என்டிஏ 38 இடங்களை வெல்லக்கூடும் என்று இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

லோக்சபா தேர்தல் தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. இந்த சர்வேக்கள் பல்வேறு அதிர்ச்சி தரும் சுவாரசியமான விஷயங்களை வெளியிட்டு வருகின்றன. இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் இது தொடர்பாக கருத்து கணிப்புகளை மேற்கொண்டு உள்ளன.

Lok sabha Prediction survey Congress to win more seats than BJP in South India says report

அதன்படி இப்போது தேர்தல் நடந்தால் தென்னிந்தியாவில் மொத்தமுள்ள 130 மக்களவைத் தொகுதிகளில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி 60 இடங்களையும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக என்டிஏ 38 இடங்களை வெல்லக்கூடும் .

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், அதிமுக, பிஆர்எஸ், ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட மற்ற கட்சிகள் மீதமுள்ள 32 இடங்களில் வெற்றி பெறலாம் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு: திமுக ஆளும் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுகவின் இந்திய கூட்டணி 30 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 5 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் வெற்றிபெறலாம் என சர்வே கணித்துள்ளது.

கட்சி வாரியாக, திமுக 20 இடங்களிலும், அதிமுக மற்றும் பாஜக தலா 4 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும், பாமக ஒரு இடத்திலும், மற்றவர்கள் 4 இடங்களிலும் வெற்றி பெறலாம்.

மண்டல வாரியான கணிப்புகள்:: சென்னை மொத்தம் 6 (திமுக கூட்டணி 5, அதிமுக 1), வட தமிழகம் மொத்தம் 7 (திமுக 6, என்.டி.ஏ. 1), மேற்கு தமிழ்நாடு மொத்தம் 9 (திமுக 6, என்.டி.ஏ. 2, அதிமுக 1), தென் தமிழ்நாடு மொத்தம் 10 (திமுக 7, தே.மு.தி.க. 2, அதிமுக 1), காவிரி டெல்டா மொத்தம் 7 (திமுக 6, அதிமுக 1).

தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ-எம், விசிகே, ஐயுஎம்எல் மற்றும் பிற சிறிய கட்சிகளை உள்ளடக்கியது இந்தியா கூட்டணி.

புதுச்சேரி: அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவுடன் புதுச்சேரியில் உள்ள ஒரே லோக்சபா தொகுதியில் பாஜக வெல்லும் என சர்வே கூறுகிறது.

கர்நாடகா: காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் பாஜக 22 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான ஜனதா தளம் (எஸ்) 2 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என சர்வே கூறுகிறது.

மண்டல வாரியான கணிப்புகள்: வட கர்நாடகா மொத்தம் 11 (NDA 9, I.N.D.I.A 2), கடலோர கர்நாடகா மொத்தம் 3 (NDA 3), தெற்கு கர்நாடகா மொத்தம் 9 (NDA 8, I.N.D.I.A 1), பெங்களூரு மொத்தம் 5 (NDA 4, I.N.D.I.A 1).

ஆந்திரப் பிரதேசம்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆளும் ஆந்திரப் பிரதேசத்தில் ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர்சிபி 15 இடங்களிலும், தெலுங்கு தேசம் கட்சி 10 இடங்களிலும் மொத்தமுள்ள 25 இடங்களில் வெற்றி பெறலாம் என கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

மண்டல வாரியான கணிப்புகள்: கீழ் ஆந்திரா மொத்தம் 8 (TDP 4, YSRCP 4), ராயலசீமா மொத்தம் 7 (YSRCP 5, TDP 2). அப்பர் ஆந்திரா மொத்தம் 10 (YSRCP 6, TDP 4).

தெலுங்கானா: காங்கிரஸ் ஆளும் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஒன்பது இடங்களிலும், பாஜக 5 இடங்களிலும், பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) இரண்டு இடங்களிலும், அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் ஒரு இடத்திலும் மட்டுமே வெற்றி பெறலாம் என சர்வே கூறுகிறது.

பிராந்திய வாரியான கணிப்புகள்:: கிரேட்டர் ஹைதராபாத் மொத்தம் 4 (BJP 1, BRS 1, காங்கிரஸ் 1, AIMIM 1), கீழ் தெலுங்கானா மொத்தம் 6 (காங்கிரஸ் 4, BJP 1, BRS 1), மேல் தெலுங்கானா மொத்தம் 7 (காங்கிரஸ் 4, பாஜக 3)

கேரளா: இடது ஜனநாயக முன்னணி ஆளும் கேரளாவில், ஐ.என்.டி.ஐ.ஏ பிளாக் 17 இடங்களிலும், பா.ஜ.க., மொத்தமுள்ள 20 இடங்களில் எஞ்சிய மூன்றில் வெற்றி பெறலாம். காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் 11 இடங்களிலும், சிபிஐ(எம்) தலைமையிலான எல்டிஎப் 6 இடங்களிலும் வெற்றிபெறலாம் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது.

LDF ஆனது CPI-M, CPI மற்றும் பிற சிறிய கட்சிகளை உள்ளடக்கியது. காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் பிற கட்சிகளை UDF கொண்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக மற்றும் பிற சிறிய கட்சிகள் அடங்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+