தமிழ்நாட்டில் திமுகதான் கிங்.. பிரம்மாண்டமாக மலருது பாஜகவின் "தாமரை".. எத்தனை இடம்? பரபர கணிப்பு
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுகதான் அதிக இடங்களை வெல்லும், ஆனால் அதே சமயம் பாஜக 6 இடங்கள் வரை வெல்லும் வாய்ப்பு உள்ளதாக டைம்ஸ் நவ் - இடிஜி கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் பிரச்சாரங்கள் நாடு முழுக்க தீவிரமாக நடந்து வருகின்றது. இது தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் லோக்சபா தேர்தல் தொடர்பாக டைம்ஸ் நவ் - இடிஜி கருத்து கணிப்புகளை மேற்கொண்டு உள்ளன.

டைம்ஸ் நவ் - இடிஜி கருத்துக்கணிப்பின்படி, தமிழகத்தில் மொத்தம் 39 இடங்கள் உள்ளன. வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க 21-22 இடங்களைப் பிடிக்கும். அதாவது திமுகவின் சின்னம் மட்டும் 22 இடங்கள் வரை வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
திமுக சின்னம் போட்டியிடுவதே 21 சின்னம்தான். அதே நேரத்தில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 5 முதல் 7 இடங்களைப் பிடிக்கும் என்று இந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், 2019-ல் தமிழ்நாட்டில் தனது கணக்கைத் திறக்கத் தவறிய பா.ஜ.க
தேர்தல்களில் இரண்டு முதல் ஆறு இடங்களை பிடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கணிப்பில். பாஜகவின் முன்னாள் கூட்டணி கட்சியான அதிமுக ஒன்று முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக இல்லாமல் மற்றவர்கள் நான்கிலிருந்து ஐந்து இடங்களைப் பெறலாம். அதாவது இந்த மற்ற கட்சிகள் திமுக கூட்டணியில் தனி சின்னத்தில் போட்டியிடும் விசிக போன்ற கட்சிகளோ, அதிமுக கூட்டணியில் தனி சின்னத்தில் நிற்கும் தேமுதிக போன்ற கட்சிகளா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அல்லது நாம் தமிழரின் வெற்றியை பற்றிய கணிப்பா இது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த முறை தனி சின்னத்தில் மதிமுக, விசிக, பாமக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிடுகின்றன.
மொத்தமான ரிசல்ட்: மொத்தமாக லோக்சபா தேர்தலில் ,
மொத்த இடங்கள்: 543) || மெஜாரிட்டி 272
- பாஜக: 329-359
- காங்கிரஸ்: 27-47
- YSRCP: 21-22
- திமுக: 24-28
- டிஎம்சி: 17-21
- BJD: 10-12
- ஆம் ஆத்மி: 5-7
- மற்றவை: 72-92
என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் திமுக போட்டியிடும் தொகுதிகள் விவரம்: திமுக - 21 ( வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்பத்தூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளகுறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பெரம்பூர், தஞ்சாவூர், தேனி , தூத்துக்குடி, தென்காசி, )
காங்கிரஸ் - 9 + புதுச்சேரி (தமிழ்நாட்டில் திருவள்ளூர், கடலூர், கிருஷ்ணகிரி, நெல்லை, சிவகங்கை, கரூர்,, கன்னியாகுமரி, விருதுநகர், மயிலாடுதுறையில் காங்கிரஸ் போட்டி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது)
விசிக - 2 (சிதம்பரம், விழுப்புரம்)
சிபிஐ - 2 (நாகை மற்றும் திருப்பூர் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது)
சிபிஎம் - 2 ( மதுரை, திண்டுக்கல்)
மதிமுக -1 (திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது)
இயூமுலீ - 1 (ராமநாதபுரம்)
கொமதேக - 1 (நாமக்கல்)
-
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications