"மிகவும் அதிருப்தி".. முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடு குறித்து டைம்ஸ் நவ் சர்வே.. வெளியான ரிசல்ட்ஸ்!
சென்னை: தமிழ்நாடு முதல்வரின் செயல்பாடு குறித்து டைம்ஸ் நிறுவனம் கருத்து கணிப்பு வெளியிட்டு உள்ளது. முதல்வரின் செயல்பாடு மிகவும் அதிருப்தி அளிப்பதாக இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
லோக்சபா தேர்தல் தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. இந்த சர்வேக்கள் பல்வேறு அதிர்ச்சி தரும் சுவாரசியமான விஷயங்களை வெளியிட்டு வருகின்றன. டைம்ஸ் நவ் - மேட்ரைஸ் என்சி இது தொடர்பாக கருத்து கணிப்புகளை மேற்கொண்டு உள்ளன.

அதன்படி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடு குறித்தும் கருத்து கணிப்பு வெளியிட்டு உள்ளது.
- மிகவும் திருப்தி: 21% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
- ஓரளவு திருப்தி: 27% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
- மிகவும் அதிருப்தி: 44% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
- சொல்ல முடியாது: 8% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதாவது அதிகமான மக்கள் முதல்வர் ஸ்டாலினின் செயல்பாட்டில் மிகவும் அதிருப்தி: 44% இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
லோக்சபா தேர்தல் கணிப்பு; அதுபோக தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்றும் கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. . தமிழ்நாடு (மொத்த இடங்கள்- 39): லோக்சபா தொகுதி கணிப்புகள் இதோ:
- பாஜக: 1
- திமுகவின் இந்தியா கூட்டணி - 36
- அதிமுக: 2
- மற்றவை: 0
தமிழ்நாட்டில் தோல்வி: அதே சமயம் தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வி அடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு (மொத்த இடங்கள்- 39): லோக்சபா தொகுதி கணிப்புகள் படி பாஜக: 1 இடத்தில் மட்டுமே வெல்லும். திமுகவின் இந்தியா கூட்டணி - 36 இடங்களில் வெல்லும். 39 இடங்களில் இருந்து 3 இடங்களை திமுக இழக்கும் என்றாலும், பெரும்பான்மை இடங்களில் திமுகவே வெல்லும். அதிமுக: 2 இடங்களில் வெல்லும். கடந்த முறை ஒரு தொகுதியில் வென்ற அதிமுக இந்த முறை 2 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
மொத்தமாக ரிசல்ட் என்ன: மக்களவையின் ஒட்டுமொத்த கணிப்பு:
மொத்த இடங்கள்: 543
பாஜக கூட்டணி: 366
இந்தியா கூட்டணி: 104
மற்றவை: 73
மீண்டும் பாஜக ஆட்சி: இதன் மூலம் பாஜக மீண்டும் முழு பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. 3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
மற்ற மாநிலங்களில் நிலை எப்படி: உத்தரப் பிரதேசம் (மொத்த இடங்கள்: 80): மக்களவைத் தொகுதிப் கணிப்புகள் இதோ:
பாஜக+: 77
இந்தியா: 3
பிஎஸ்பி: 0 ஆகிய இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
சத்தீஸ்கர் (மொத்த இடங்கள்: 11): லோக்சபா தொகுதி கணிப்புகள் இதோ:
பாஜக: 11
காங்: 0
மற்றவை: 0
குஜராத் (மொத்த இடங்கள்: 26): லோக்சபா தொகுதி கணிப்புகள் இதோ:
பாஜக: 26
காங்: 0
AAP+: 0
மற்றவை: 0
ராஜஸ்தான் (மொத்த இடங்கள்: 25): லோக்சபா தொகுதி கணிப்புகள் இதோ:
பாஜக: 25
காங்: 0
மற்றவை: 0
மத்தியப் பிரதேசம் (மொத்த இடங்கள் - 29): லோக்சபா சீட்-கணிப்புகள் இதோ:
பாஜக: 28
காங்: 1
மற்றவை: 0
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications